Header

Sri Lanka Army

Defender of the Nation

01st June 2020 15:00:00 Hours

புதிய 11 பிரிவு ஜிஓசி பதவியேற்பு

கஜபா படையணியின் மேஜர் ஜெனரல் ஜாலிய சேனரத்ன 11 ம் படைப்பிரிவின் புதிய தளபதியாக) திங்கட்கிழமை 01ம் திகதி குண்டசாலை, பல்லேகலையில் மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் இராணுவ சம்பிரதாயங்களுடன் பதவியேற்றார்.

கிழக்குப் பாதுகாப்புப் படைகளின் தளபதியாக மேஜர் ஜெனரல் சேனரத் பண்டார நியமிக்கப்பட்டமை காரணமாக இவர் நியமனம் பெறுகின்றார்.

மேஜர் ஜெனரல் ஜாலிய சேனரத்னவும் படைப்பிரிவு தலைமையகத்தில் மரக்கன்று ஒன்றை நாட்டி வைத்து படையினருக்கு உரையாற்றினார். பின்பு அனைத்து நிலைகளுக்குமான தேனீர் விருந்து இடம்பெற்றது.

நிகழ்வில் பிரிகேட் தளபதிகள், படை கட்டளை அதிகாரிகள், சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் படையினர் கலந்து கொண்டனர். spy offers | Jordan Release Dates , Iicf