Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd June 2020 18:00:19 Hours

புதிய பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன கடமை ஏற்றல்

மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்கள் 55 வது பதவி நிலை பிரதானியாக இராணுவ சம்பிரதாய முறைகளின்படி மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் 01 ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவர் மகா சங்கத்தினரின் ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் உத்தியோகபூர்வ ஆவனத்தில் கையெழுத்திட்டு கடமையை பொறுப்பேற்றார். இவர் இந்த நியமனத்துக்கு முன்பு இலங்கை இராணுவ தொண்டார் படையணியின் படைத் தளபதியாக பணியாற்றியதுடன், தற்போது இலங்கை பொறியியலாளர் சேவைப் படையணியில் படைத் தளபதியாகவும் பணியாற்றி வருகிறார்.

நிகழ்வில் அவருக்கு வருகை தந்திருந்த சிரேஷ்ட அதிகாரிகளால் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன இலங்கை இராணுவ கட்டளை மற்றும் பணிக் கல்லூரி (பாடநெறி எண் 2),பாகிஸ்தான் குயிட்டா கட்டளை மற்றும் இராணுவ பணி கல்லூரி ஆகியவற்றின் பட்டதாரி ஆவார்.1999 ஆம் ஆண்டில் இராணுவ கட்டளை மற்றும் பணி கல்லூரியில் சிறந்த ஆய்வுக் கட்டுரைக்கான தங்க பேனை விருதைப் பெற்றவர். இவர் தனது தொழில் வாழ்க்கையில் வகித்த நியமனங்களாக இலங்கை இராணுவ கல்லூரியின் பயிற்சி அதிகாரியாகவும், பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணி கல்லூரியில் பணிப்பாளராகவும், பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணிக் கல்லூரியில் இராணுவ பயிற்சி பிரிவின் தலைவராகவும் சேவையாற்றியுள்ளார்.

பாகிஸ்தான் பல்கலைக்கழகத்தில் போர் ஆய்வுகள் தொடர்பாக இளங்கலை அறிவியல் சிறப்புப் பட்டத்தையும் இலங்கை களனி பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஆய்வுகளில் முதுமானி பட்டத்தையும் ,ஐக்கிய இராச்சியத்தின் பிராட்போர்ட் பல்கலைக்கழகத்தில் கள நடவடிக்கைக்கான முதுமானி பட்டத்தையும் பெற்றுள்ளார்.

அவர் தனது இராணுவ வாழ்க்கையில் இராணுவத்தில் விளையாட்டுகளை மேம்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டியவர். இவர் இராணுவ நீச்சல் மற்றும் வோட்டர்-போலோவின் தலைவராகவும், இலங்கை இராணுவ கால்பந்து குழுவின் உப தலைவராகவும், இராணுவ ஸ்குயிஷ் குழுவின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். தற்போது இராணுவ கராத்தே குழுவின் தலைவராகவும் உள்ளார்.

யுத்த உபகரண தளபதி போன்ற இராணுவத் தலைமையகத்தின் பல உயர் பதவிகளில் இருந்துள்ளார். வன்னி பாதுகாப்பு படைத் தளபதியாகவும் , 57 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாகவும், பாதுகாப்பு அமைச்சின் பிரதி இராணுவ அதிகாரியும், பாதுகாப்பு அமைச்சின் திட்டப் பணிப்பாளராகவும் சேவையாற்றியுள்ளார்.

தனது இராணுவ வாழ்க்கையில் பல முக்கிய நடவடிக்கைகளில் கள பொறியியலாளர் அதிகாரியாக பங்கேற்ற அவர், 1991 ல் ஆணையிரவு இராணுவ முகாம் மீட்பு நடவடிக்கையான பலவேகய சன்டையின் போது காயமடையந்தார்.

இவர் “ரண சூரபதக்கம் (ஆர்எஸ்பி) “விசிஷ்ட சேவா விபுஷ” (வி.எஸ்.வி)பதக்கம், உத்தம சேவாபதக்கம் ஆகியவற்றால் பராட்டப்பட்டுள்ளார். அதோடு, தேசத்திற்கு ஆற்றிய சேவைகளை அங்கீகரிப்பதற்காக அவருக்கு 12 க்கும் மேற்பட்ட சேவை பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலான இராணுவ வாழ்க்கையில் வெடிப்பொருள் செயலிழக்கும் பிரிவின் கட்டளை அதிகாரியாகவும் 8வது கள பொறியியலாளர் படைப்பிரிவு மற்றும் 6 வது கள பொறியியலாளர் படைப்பிரிவு ஆகிய கள நடவடிக்கை படைகளுக்கு கட்டளை அதிகாரியாக செயற்பட்டுள்ளார். அதே காலகட்டத்தில் அவர் வவுனியா அகழ்வு நடவடிக்கை தொழில்நுட்பக் குழுவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். பின்னர் பருத்தித்துறை 524 வது படையின் படைத் தளபதியாகவும், இலங்கை பொறியியலாளர் படையணியின் நிலையத் தளபதியாகவும் , பின்னர் பொறியியலாளர் படைத் தளபதியாகவும் சேவையாற்றியுள்ளார். பொறியியலாளர் படைத் தளபதியாக அகழ்வு செயல்முறை மற்றும் தரத்தை மிக உயர் அங்கிகாரத்திற்கு இலங்கையில் விரைவுபடுத்தினார்.

பொறியியல்,தொழில் கூட பொறியியல் திட்டங்கள், அகழ்வு தொழிலில் போன்ற துறைகளில் பரந்த அனுபவம் பெற்ற இவர், பொறயியலாளர் படைப்பிரிவு தளபதியாக தேசத்தின் பல கட்டுமான திட்டங்களுக்கு பங்களிப்பு செய்துள்ளார்.இராணுவத்தின் முதல் இரசாயணவியல் உயிரியல் கதிரியக்க அணுசக்தி படைப் பிரிவைப் பயிற்றுவித்து நிறுவுவதற்கு முன்னோடியாக இருந்தவர்.பின்னர் இது 14 வது இரசாயணவியல் உயிரியல் கதிரியக்க அணுசக்தி படைப் பிரிவாக உருவாக்கப்பட்டது. இவர் நேபாள பூகம்ப மீட்பு நடவடிக்கைக் படைத் தளபதியாக பங்கேற்றி பாதிக்கப்பட்டவர்களின் மீட்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வழங்கிய ஒத்துழைப்பு மிகவும் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்பட்டன. Nike Sneakers Store | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp