30th May 2020 13:20:59 Hours
56 படைப்பிரிவின் 21 வது தளபதியாக இலங்கை பொறியியலாளர் படையணியின் மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகர வெள்ளிக்கிழமை 29ம் திகதி வவுனியா கோகெலியவில் உள்ள 56 வது படைப்பிரிவு தலைமையகத்தில் சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைவான விழாவில் மகா சங்கத்தினரின் ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் பதவி ஏற்றுக் கொண்டார்.
அவர் தனது பதவியை உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு ஏற்றுக்கொண்டார். இந் நிகழ்வில் 561, 562 மற்றும் 563 படைகளின் தளபதிகள், 56 படைப்பிரிவு உயரதிகாரிகள் 56 படைப்பிரிவின் கீழ் உள்ள கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர் புதிதாக பதவியேற்ற தளபதிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். Running sneakers | Women's Sneakers