Header

Sri Lanka Army

Defender of the Nation

29th May 2020 20:27:28 Hours

வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில் வளாகத்தில் படையினர் மர நடுகை

பாதுகாப்புப் தலைமை பிரதானி மற்றும் இராணுவத் தளபதியின் 'துரு மிதுரு - நவ ரட்டக்' எனும் விவசாய திட்டத்திற்கு இணங்க முல்லைப் பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 59 ம் படைப்பிரிவு படையினர் மர நடுகை திட்டத்தை வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில் வளாகத்தில் திங்கட்கிழமை 25 ம் திகதி ஆரம்பித்தனர். இதன் போது சிறப்பு விருந்தினராக 59 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா கலந்துக் கொண்டார்.

12 வது இலங்கை இலேசாயுத படை மற்றும் 24 ம் இலங்கை சிங்க படையினர் புனித இடத்தை சுற்றி ஒவ்வொன்றும் 7 அடிக்கு மேல் கொண்ட 26 வேப்பக்கன்றுகளை நாட்டி வைத்தனர்.

முல்லைப் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தீப்தி ஜயதிலக்கவின் அறிவுறுத்தலின் பேரில் பிரதேசத்தின் வனப் பகுதியின் அடர்த்தியை அதிகரிக்கும் நோக்கில் திட்டம் முன் எடுக்கப்பட்டது.

வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில் பிரதம குருக்கள் 59 ம் படைப்பிரிவுத் தளபதி, கட்டளை அதிகாரிகள், முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரதிநிதிகள், எவலோன் ஹோட்டல் & ஸ்பாவின் பணிப்பாளர், கோவில் பரிபாலன சபை உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் படையினர் இத்திட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.Nike Sneakers | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092