29th May 2020 21:30:17 Hours
பாதுகாப்பு நவீனமயமாக்கலில் மாற்றத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டிய இராணுவ உத்திகளை ஆராய்ந்து அடுத்த 2020-2025 ஐந்து ஆண்டிற்கான இராணுவ உத்திகளை மேம்படுத்தும் திட்டத்தின் கட்டம் 2 வியாழக்கிழமை 28 ஆம் திகதி பாதுகாப்புத் தலைமைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவின் எண்ணக்கருக்கமைவாக இடம்பெற்றது. இங்கு உலகளாவிய புவியமைப்பின் அச்சுறுத்தல் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.
இன்று காலை 28 ஆம் திகதி உயர் மட்ட சிரேஷ்ட அதிகாரிகள் மீண்டும் கூடி கருப்பொருளைப் பற்றி இலங்கையின் புகழ்பெற்ற மூலோபாயவாதியும் பிரதம நிர்வாக அதிகாரிகளுக்கான நிர்வாக பயிற்றுவிப்பாளருமான கலாநிதி உதய இந்திரரத்ன முன்னிலையில் இரண்டாவது தடவையாக அமர்வு நடைப்பெற்றது. இங்கு இன்றைய உலகின் மின்னியல் ஆயுதங்கள், கருமை போர் எல்லைகள் மற்றும் உருவமற்ற எதிரிகள் தொனிப்பொருள்களில் முக்கிய மூல உபாயங்களை உள்ளடக்கிய விரிவான பல்ஊடக விளக்கக்காட்சியை முன் வைத்தார்.
இதன் கட்டம் 01 பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவத் தளபதியின் தலைமையில் இராணுவத் தலைமையகத்தில் மே மாதம் 6 ஆம் திகதி இடம்பெற்றது.
வியாழக்கிழமை அமர்வில் புகழ் பெற்ற மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கான நிர்வாக பயிற்றுவிப்பாளரும் மூலோபாய நிபுணருமான கலாநிதி உதய இந்திரரத்ன அவர்களால் இன்றைய மின்னணு ஆயுதங்கள், கருமை போர்க் எல்லைகள் மற்றும் உருவமற்ற எதிரிகள் சூழலின் முக்கிய உத்திகள் தொடர்பாக குழுச் செயற்பாடுகள் மற்றும் தனிநபர் முன்வைப்புக்கள் ஊடாக கலந்துரையாடப்பட்டது. இங்கு சூழல், உடல் தார்மீகம் மற்றும் பொதுக் கருத்துக்கள்தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.
இறுதி அமர்வில் முழு நாளுக்கான நடவடிக்கைகளின் அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகள் மீள்பரிசீலனை செய்து கலாநிதி உதய இந்திரரத்னயினால் சுருக்கப்படுத்தப்பட்டது. இதன் போது செயலமர்விற்கு வலு சேர்க்கும் வகையில் பாதுகாப்பு தலைமைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கொண்டார்.
அன்றைய நடவடிக்கைகளின் முடிவில், பாதுகாப்பு தலைமைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா வேகமாக மாறிவரும் உலகளாவிய அச்சுறுத்தல் சூழ்நிலையின் பின்னணிக்கு ஏற்றவாறு விழிப்புடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். விவாதக் கருத்துக்களைப் பாராட்டினார். Nike sneakers | Shop: Nike