Header

Sri Lanka Army

Defender of the Nation

27th May 2020 08:30:31 Hours

படைகல சிறப்பணி சிவில் ஊழியர்களின் புதிய விடுதி திறக்கப்பட்டது

படைகல சிறப்பணி பிரிகேட் மற்றும் 1 வது படைகல சிறப்பணிகளில் சேவையாற்றும் சிவில் ஊழியர்களின் நீண்டகால தேவையாக காணப்பட்ட இரண்டு மாடி சிவில் விடுதி கட்டிடம் படைகல சிறப்பணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் எம்எஸ் தேவப்பிரியவின் அழைப்பின் பேரில் பிரதம விருந்தினராக இராணுவப் பதவி நிலைப் பிரதானியும் படைகல சிறப்பணி படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே அவர்களால் 28ம் திகதி காலை ராக் ஹவுஸ் முகாம் வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது. இது 56 பேர் தங்கக் கூடிய இடவசதியைக் கொண்டது.

சுகாதார விதிமுறைகளுக்கு அமைவான விழாவில் பிரதம அதிதி நினைவு பலகையை திறந்தும் நாடாவைவெட்டியும் திறந்து வைக்கப்பட்டது.

திறப்பு விழாவில் படைகல சிறப்பணி பிரிகேட் தளபதி, படைகல சிறப்பணியின் பிரதி நிலைய தளபதி, கமாண்டன்ட், கட்டளை அதிகாரி 1 வது படைகல சிறப்பணி கட்டளை அதிகாரி 1 பொறியியல் சேவைகள் படையணி கட்டளை அதிகாரி மற்றும் சிரேஸ்ட அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர். Best Authentic Sneakers | UK Trainer News & Releases