28th May 2020 22:17:15 Hours
இலங்கை வர்த்தக சபையின் மாதாந்த கூட்டத்திற்கு கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை விருந்தினர் பேச்சாளராக அழைத்திருந்தது. இன்று 28ம் திகதி இணையத்தள வீடியோ ஊடான வினா விடை நிகழ்வில் பதிலளித்த விதம் தொடர்பாக அவர்ர்கள் பாராட்டுக்களை தெரிவித்திருந்தனர்.
தனது உரையில் கொவிட் 19 பரவலை வெற்றிகரமாக நிர்வகித்த இலங்கை மற்றும் முன்னோக்கி செல்லும் வழிகள் என்ற கருப்பொருளில் உரையாற்றினார்.
இலங்கையில் கொவிட் 19 பரவலை தடுப்பதற்கு தொடர்ச்சியாக லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா வழங்கும் ஒத்துழைப்பினை கௌரவிக்கும் முகமாக இவ்வழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தளபதியின் வினா விடை உரை கலந்துக் கொண்டவர்களின் பெரும் ஆர்வத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியதாக அமைப்பினர் தெரிவித்தனர்
இலங்கை வர்த்தக சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பொதுச் செயலாளருமான திரு மஞ்சுள டி சில்வா தளபதி செயலகத்திற்கு அனுப்பிய கடிதம் மூலம் இதனை தெரிவித்துள்ளார். மேலும் வினா விடை அமர்வு உறுப்பினர்களிடையே தொலைநோக்கு சிந்தனமை மீது அதிக அக்கறையை ஏற்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
அவரது பதிவு செய்யப்பட்ட வீடியோ முகவரி இங்கே latest Nike release | Converse Chuck Taylor All Star Translucent - Women Shoes - 165609C