29th May 2020 21:27:28 Hours
முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களான பனிச்சாங்கேணியில் 7 பேரும் மற்றும் ராஜகிரிய ஆயுர்வேத மருத்துவமனையிலுருந்து 8 பேரும் மொத்தம் 15 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் பீசீஆர் பரிசோதணையின் பின்னர் தனிமைப்படுத்தல் சான்றிதழ்கள் வழங்கி இன்று காலை 29 ஆம் திகதி வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
29ம் திகதி வரை 11056 பேர் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என கொவிட் 19 பரவல் தடுப்பு தேசிய பயன்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
இன்றைய நிலவரப்படி, நாடு முழுவதும் முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டும் 44 தனிமைபடுத்தும் நிலையங்களில் 5154 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர். இன்று 29ம் திகதி வரை மொத்தம் 708 கடற்படை வீரர்கள் கொவிட் 19 வைரஸ் தாக்கத்தில் உள்ளாகி உள்ளனர். கடந்த 24 மணித்தியாலயங்களில் மட்டும் 26 கடற்படை வீரர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். 366 பேர் முழுமையாக சுகமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் மேலும் 342 கடற்படையினர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.affiliate tracking url | NIKE