26th May 2020 14:09:13 Hours
புனித பூமியான அனுராதபுரத்தில்லுள்ள சந்தஹிரு சாய தூபியின் சதுரக் கோட்டத்திற்கான முதல் செங்கல் வைக்கும் நிகழ்வானது மகா சங்கத்தினரது வழிப்பாடுகள் மற்றும் ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் 25 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்றது.
இப் பண்டைய இராசதானி அநுராதபுரத்தின் மூன்றாவது மிகப் பெரிய தூபியினை சில வருடங்களுக்கு முன்பு அதிமேன்மை தாங்கிய ஜனாதிபதியினால் உயிர் நீத்த படையினரின் ஞாபகார்த்தமாக மீள் நிர்மானம் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. இறுதிக்கட்ட கட்டுமானப் பணிகள் படையினரால் துரிதமாக முன்னெடுக்கும் வேளையில் சதுரக் கோட்டத்திற்கான முதல் செங்கலினை பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்கள் சார்பாக வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக்க ஜயசிங்க நாட்டி வைத்தார்.
இறுதிக்கட்ட பணிகளை தொழில் வான்மை பெற்ற முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினர் மேற்கொள்கின்றனர்.
நிகழ்வில் 21 ஆவது படைப் பிரிவின் தளபதி, 212 ஆவது படைத் தளபதி 09 ஆவது மற்றும் 02 ஆவது பொறியியல் சேவைகள் படை மற்றும் 5 ஆவது இலங்கை இராணுவ தேசிய பாதுகாப்பு படைகளின் கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர் கலந்துக் கொண்டிருந்தனர். latest Running | Nike