Header

Sri Lanka Army

Defender of the Nation

24th May 2020 22:25:58 Hours

ஈர்க்கப்பட்ட புலம் பெயர்ந்தவர்கள் பணப் பரிசை ‘இட்டுகம’ நிதிக்கு வழங்கினார்கள்

ராஜகிரியா ஆயுர்வேத போதனா வைத்தியசாலையில் இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப் படுத்தப்பட்டிருந்த வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த 113 பேர் இராணுவ வீரர்களின் சேவையில் ஈர்க்கப்பட்டு ரூபா 825,000.00 பண நன்கொடையினை இன்று (24) காலை 'இட்டுகம' எனும் கொவிட் -19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு வழங்கினார்கள்.

இந்த 113 பேர் ஆவுஸ்திரேலியாவிலிருந்து அழைத்து வரப்பட்டு மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.

தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்து தனிமைப்படுத்தல் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்ட போது கூட்டாக சேர்ந்து இந்த பண நன்கொடையை இராணுவ சேவை வழங்கல் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த மடோல அவர்களிடம் வழங்கினார்கள். ஒரு பிரதிநிதி குழு இந்த நன்கொடையை வழங்கியிருந்தது. affiliate link trace | Jordan Shoes Sale UK