Header

Sri Lanka Army

Defender of the Nation

21st May 2020 20:28:26 Hours

அதிகமான இலங்கையர்கள் நமது நாட்டிற்கு அனுப்பப்பட்டதுடன், மேலும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்தவர்கள் வீட்டிற்கு விடுப்பு

மேன்மை தங்கிய ஜனாதிபதியின் பரிந்துரைப்பின் பிரகாரம் இந்தோனேசியாவிற்கு சொந்தமான ஜிஏ 9820 விமானத்தின் மூலம் இந்தோனேசியாவிலிருந்து 109 இலங்கையர்கள் இம் மாதம் (21) ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்தனர் என்று கோவிட் -19 தேசிய தடுப்பு செயல்பாட்டு மையம் தெரிவித்தது. அத்துடன் இவர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைகளின் பின்பு இலங்கையிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் மூன்று வார காலமாக முப்படையினரால் பராமரித்து வரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களான அம்பாறையிலிருந்து (27) பேரும், வஸ்கடுவ சிட்ரஷில் (09) பேரும், ஜெட்விங் ப்ளூவில் (06) பேரும், கல்கிஸ்சையில் (06) , கடற்படையினரது பூசா முகாமிலிருந்து (06)பேரும், தனிமைப்படுத்தப்பட்டலின் பின்பு மருத்துவ பரிசோதனை சான்றிதழ்களுடன் தங்களது வசிப்பிடங்களுக்கு இம் மாதம் 20, 21 ஆம் திகதிகளில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

தனிமைப்படுத்தலின் பின்பு மாத்தறை மற்றும் கொழும்பு பகுதிகளில் தங்களது வதிவிடங்களுக்கு சென்ற நபர்களுக்கு இராணுவ போக்குவரத்து வசதிகளும் ஆகார வசதிகளும் வழங்கி இராணுவத்தினரால் வழங்கி வைக்கப்பட்டன அத்துடன் இவர்கள் இந்த மையங்களிலிருந்து செல்லும் போது இவர்கள் இந்த மையங்களுக்குபொறுப்பான கட்டளை அதிகாரிகளினால் வழி அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Nike shoes | Nike Running