Header

Sri Lanka Army

Defender of the Nation

16th May 2020 23:39:31 Hours

இராணுவ பதவி நிலை பிரதானி ‘அபிமன்சல 3’ விடுதிக்கு விஜயம்

இலங்கை இராணுவ படைக்கலச் சிறப்பணியின் படைத் தளபதியும் இராணுவ பதவி நிலை பிரதானியுமான மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே அவர்கள் புதன் கிழமை 13 ஆம் திகதி குருநாகல மற்றும் பங்கொல்ல ஆகிய இடங்களில் உள்ள மாற்றுத் திறனாளின் ‘அபிமன்சல 3’ விடுதிகளுக்கு விஜயத்தினை மேற்கொண்டார்.

விஜயத்தை மேற்கொண்ட மேஜர் ஜெனரல் லியனகே அவர்கள் அங்குள்ளவர்களிடம் தனது எண்ணங்களை பங்கிர்ந்து கொண்டதுடன் அவர்களின் நல்வாழ்வு மற்றும் தேவைகளையும் கேட்டறிந்து கொண்டார்.

‘அபிமன்சல 3’ விடுதியின் நிறைவேற்று கட்டளை தளபதி கேணல் ஏஎச் விஜயகுணவர்தன அவர்கள் மற்றும் சில அதிகாரிகள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். affiliate link trace | Air Jordan