09th May 2020 08:38:38 Hours
புத்தளம்,தப்பொவை பிரதேசத்தில் அமைந்துள்ள 143 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினரால் வெசாக் வாரத்தினை முன்னிட்டு, மஹகும்புகடவல மற்றும் பல்லம பிரதேச செயலகத்திற்குட்பட்ட வரிய குடும்பங்களுக்கு ஒவ்வொன்றும் 1500 பெறுமதியான 100 உலர் உணவுப் பொதிகள் செவ்வாய்கிழமை 5 ஆம் திகதி வழங்கப்பட்டன.
இவ்வன்பளிப்பு நிகழ்வானது மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரத்ன மற்றும் 14 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எச்.எம.டி.பி ஹங்கிலிபொல ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் இடம்பெற்றது. 143 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி பிரிகேடியர் டி.எம்.பி.டி. திஸாநாயக்க, பின்பொத்த குழு உறுப்பினர்கள், எம்.ஆர் அஷான் வீரகோண் , படைத் தலைமையக அதிகாரிகள், பல்லம பிரதேச செயலாளர் ஆகியோர் இணைந்து குறித்த உலர் உணவுப் பொதிகளை பகிர்ந்தளித்தனர். Sportswear free shipping | Nike