10th May 2020 18:08:47 Hours
அம்பேபுஸ்ஸயில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இலங்கை இராணுவ சிங்க படையணியின் ட்ரஞ்சியன் விடுதியானது 09 ஆம் திகதி சனிக்கிழமை இலங்கை இராணுவ சிங்க படையணியின் படைத் தளபதியும் மற்றும் இலங்கை இராணுவ காலாட் படையணி பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் மனோஜ் முத்தநாயக அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் இலங்கை இராணுவ சிங்க படையணியின் மத்திய படைத் தளபதி பிரிகேடியர் அஜித் பல்லேவெல , மேஜர் ஜெனரல் (ஓய்வு) குமுது பெரேரா மற்றும் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரத்ன ஆகியோர் இணைந்து அங்கு வருகை தந்த பிரதம அதிதியவர்களை புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்தை திறந்துவைப்பதற்காக அழைத்தனர்.
அதனைத் தொடர்ந்து அன்றைய பிரதம அதிதி அவர்கள் மகா சங்கத்தினரின் மத அனுஸ்டானங்களின் பின்னர் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய படையணியின் விடுதி மற்றும் ஜனாதிபதி ட்ரஞ்சியன் ஆகியவற்றை பார்வையிட்டார். இந்த கட்டிடம் படையணியின் நிதியில் இருந்து 5 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் கட்டுமான பணிகள் இலங்கை இராணுவ சிங்க படையணியின் படையினரால் மேற்கொள்ளப்பட்டன.
அதன் பின்னர் இலங்கை இராணுவ சிங்க படையணியின் படைத் தளபதி மற்றும் ஏனைய அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் அம்பேபுஸ்ஸயில் ‘கடுபுல்’ மற்றும் ‘மாதர’ என்ற பெயரில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட விடுமுறை விடுதிகளின் திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்த கட்டிடம் சிரேஷ்ட ஆணைபெறாத அதிகாரிகள் மற்றும் படையினர்களுக்காக திறந்து வைக்கப்பட்டன.
இந்த கட்டிடத்தில் அனைத்து நவீன வசதிகளையும் கொண்டு உறுவாக்கப்பட்ட புதிய கட்டுமான பணிகள் இலங்கை இராணுவ பொறியியலாளர் சேவைப் படையணியின் ஆலோசனையுடன் இலங்கை இராணுவ சிங்க படையணியின் படையினரால் ரூ .6 மில்லியன் சிங்க படையணியின் நிதி உதவியுடன் கட்டப்பட்டன.
இக் கட்டிடமானது பிரதம அதிதியினால் திறந்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து (ஓய்வு) மேஜர் ஜெனரல் குமுது பெரேரா மற்றும் மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரத்ன ஆகியோர் வைபவரீதியாக ரிபன் வெட்டி திறந்து வைத்தனர்.
அதன்பிறகு, படையணியின் படைத் தளபதி , சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து வளாகத்தையும் சுற்றி பார்வையிட்டார்.
பின்னர், அன்றைய பிரதம அதிதியவர்கள் குறித்த விடுமுறை விடுதிகள் மற்றும் ட்ரஞ்சியன் விடுதி ஆகியவற்றினை நிர்மாணிப்பதற்கு பங்களிப்பு செய்த படையினரை பாராட்டி அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதல்களையும் வழங்கினார்.
இந்த நிகழ்வில் இலங்கை இராணுவ சிங்க படையணியின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், அவர்களின் துனைவியர்கள், பொறுப்பதிகாரிகள் மற்றும் படையினர் அனைவரும் சமூக சுகாதார இடை வெளிகளை பின்பற்றி கலந்துகொண்டனர். Buy Sneakers | Autres