Header

Sri Lanka Army

Defender of the Nation

10th May 2020 15:08:47 Hours

கிளிநொச்சி படையினரால் தொற்று நீக்கி பணிகள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் 572 ஆவது படைப் பிரிவில் கீழ் இயங்கும் 7 ஆவது இலங்கை இராணுவ இலேசாயுத கலாட் படையணியின் படையினர், (9) ஆம் திகதி சனிக்கிழமை பொது மக்களின் நலன்களை கருத்திற்கொண்டு கிளிநொச்சி நகரத்தில் முக்கியமான பொது இடங்களை கிருமிநாசினி நீக்கம் செய்யும் பணிகளை மேற் கொண்டனர்.

இப் பணிகள் 3 கி.மீ. தூரத்தில் உள்ள வங்கிகள், அரசு அலுவலகங்கள், தனியார் துறை கட்டிடங்கள், கடைகள் மற்றும் மத ஸ்தானங்கள் மற்றும் ஏ 9 வீதி ஆகிய இடங்களில் தொற்று நீக்கம் செய்யும் பணிகளை மேற் கொண்டனர்.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ,57 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டி.எம்.பி.பி திஸாநாயக்க அவர்களின் மேற்பார்வையில் படையினர் தொற்று நீக்கும் பணிகளை மேற்கொண்டனர். இந்நிகழ்வில் 7 ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணின் படையினர் கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் பங்கு கொண்டனர். Sport media | Nike Shoes, Clothing & Accessories