14th May 2020 08:03:56 Hours
நாடுபூராகவுமுள்ள முகாம்களில் சேவைபுரியும் ஆயுதப் படைகளின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதன் நிமித்தம் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியினர் வவுனியா,கிளிநொச்சி,முல்லைத்தீவு மற்றும் யாழ் உள்ளிட்ட பாதுகாப்பு தலைமையகங்களுக்கு மே மாதம் 12-13 ஆம் திகதிகளில் தங்களது விஜயத்தை மேற்கொண்டனர்.
புதன்கிழமை 12 ஆம் திகதி வன்னி பாதுகாப்பு தலைமையகத்திற்கான விஜயத்தின் போது , வன்னி பாதுகாப்பு தலைமையக் கேட்போர்கூடத்தில் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித்த தர்மசிறி அவர்களினால் நடாத்தப்பட்ட விளக்கவுரையில் ஜனாதிபதி செயலணி உறுப்பினர்களான முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் (ஓய்வு) ஜயந்த பெரேரா மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் (ஓய்வு) ஆனந்த பீரிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். கொரோனா வைரஸ் பரவுவதற்கு எதிராக தலைமையக வளாகத்திற்குள் நடைமுறையில் உள்ள தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் விளக்கினார். அதன் பின்னர் அவர்கள் 56 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவுத் தலைமையகம், 62 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவுத் தலைமையகம், 16 இலங்கை சிங்க படையணி முகாம் மற்றும் 2 ஆவது (தொண்) விஜயபாகு காலாட் படையணி முகாம் உள்ளிட்ட இடங்களை பார்வையிடச் சென்றனர்.
பாதுகாப்பு செயலாளர் மற்றும் முப்படைத் தளபதிகளின் வழிகாட்டுதலின் கீழ் பயனுள்ள ஒரு பொறிமுறையை செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் மற்றும் தொற்று நோயைக் கருத்தில் கொண்டு இராணுவ முகாம்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதாரப் பாதுகாப்புகளை உறுதி செய்ய வேண்டிய நடவடிக்கைகளை அடையாளம் காண்பது ஆகியன இந்த ஜனாதிபதி செயலணியினரின் பொறுப்பாகும். இந்த திட்டமானது, ஓய்வுபெற்ற பாதுகாப்புத் தளபதிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் பங்களிப்புடன் அதமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களால் முன்வைக்கப்பட்டது. Running Sneakers | Nike Shoes, Clothing & Accessories