Header

Sri Lanka Army

Defender of the Nation

12th May 2020 21:59:26 Hours

பனாலுவ இராணுவ முகாமில் படையினரால் நெற் பயிர் செய்கை

இராணுவத் தளபதி அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட ‘துரு மித்துரு நவ ரடக்’ எனும் பயிர்ச்செய்கைத் திட்டத்தின் கீழ் துந்தான பனலுவ முகாம் வளாக்தினில் உள்ள 04 ஏக்கர் நிலப்பரப்பில் 12ம் திகதி செவ்வாய்க்கிழமை படையினரால் நெல் விதைக்கப்பட்டது.

மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரத்ன அவர்களின் வழிகாட்டலின் கீழ் தொடங்கப்பட்ட இந்த திட்டம், பாரம்பரிய வேளாண் நடைமுறைகளுக்கு ஏற்ப நெல் விதைக்கும் செயல் முறை மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் சுப நேரத்தில் “கமத்த” '(கதிரடிக்கும் தளம்).நெல் விதைக்கப்பட்டது.

நெல் விதைக்கும் நிகழ்வில் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரத்ன உட்பட 14 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எச்.எம்.டி.பி ஹங்கிலிபொல, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பொது நிர்வாக பிரிகேடியர், மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் நிர்வாக மற்றும் விடுதி பிரிகேடியர், 412 பிரிகேட் படைத் தளபதி, இராணுவ அதிகாரிகள் மற்றும் 1ஆவது இலங்கை இராணுவ பொதுசேவைப் படையணியின் படையினர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இவ் நெல் விதைக்கும் பணியினை பனாலுவ இராணுவ பண்ணையின் படையினர் பொறுப்பேற்றனர். latest jordans | adidas poccnr jumper dress pants size