14th May 2020 21:53:26 Hours
இராணுவ சேவையில் இருந்து ஓய்வுறுவதனை முன்னிட்டு அர்ப்பணிப்புள்ள சிரேஷ்ட அதிகாரிகளில் ஒருவரான இலங்கை சிங்க படையணியின் படைத் தளபதியும் இராணுவ காலாட் படையணியின் பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் மனோஜ் முதன்நாயக்க அவரகள் பாதுகாப்பு தலைமைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர அவர்களை செவ்வாய்க்கிழமை 12 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து சந்தித்தார்.
ஓய்வுபெற்றுச் செல்லும் பெரும்பாலான சிரேஷ்ட அதிகாரிகளை தனிப்பட்ட முறையில் பாராட்டும் வழமையினை கொண்டிருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் மேஜர் ஜெனரல் முதன்நாயக்க அவர்களினுடனான சுருக்கமான உரையாடலின் போது சில எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டார் .மற்றும் அவர்களின் கடந்தகால நினைவுகளை நினைவு கூர்ந்தார். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இராணுவத்திற்கும் இலங்கை சிங்க படையணிக்கும் சேவை செய்த மேஜர் ஜெனரல் முதன்நாயக்க அவர்கள் தற்போதைய நியமனத்திற்கு முன்னர் முன்னர் பல முக்கிய நியமனங்களை வகித்துள்ளார்.
ஓய்வுபெற்றுச் செல்லும் சிரேஷ்ட அதிகாரி இராணுவத் தளபதியின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு, தொழில்முறை வழிகாட்டுதல், வாழ்த்துக்கள் மற்றும் சிந்தனைத்தன்மை ஆகியவற்றிற்காக இராணுவத் தளபதியிடம் தனது நன்றியைத் தெரிவித்தார். இறுதியில், லெப்டினன் ஜெனரல் சில்வா ஓய்வு பெற்றவருக்கு அவரை பாராட்டும் முகமாக ஒரு நினைவு சின்னத்தினை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்றுச் செல்லும் சிரேஷ்ட அதிகாரியவர்களும் தளபதிக்கு ஒரு நினைவு சின்னத்தினை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. Authentic Nike Sneakers | Men’s shoes