11th May 2020 08:00:24 Hours
வெசாக் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி படையினரால் கராச்சி பிரதேச செயலக பகுதியில் உள்ள பொன்னகர் பகுதியில் வாழும் ஏழை குடும்பத்தினரின் வீட்டை வீட்டுச் சூழலை சுத்தம் செய்யும் பணிகளை (8) ஆம் திகதி வெள்ளிக்கிழமை மேற் கொண்டனர். மேலும் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழம் அதிகாரிகள் மற்றும் படையினர்களால் குறித்த வீட்டுக்கு தேவையான அத்தியவசிய பீங்கான். பானைகள், பேசன் உட்பட உலர் உணவு பொதிகளை நன்கொடையாக வழங்கினர்.
இந்த திட்டமானது, கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த குனரத்ன அவர்களின் வழிக்காட்டலுக்கமைய கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொது பதவி நிலை அதிகாரி அவர்களின் மேற் பார்வையில் தொடங்கப்பட்டது. அத்துடன், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர்களின் ஆளனி வளங்கள் மற்றும் நிதி உதவிகளுடன் இந்த திட்டமானது வெற்றிகரமாக நிறைவுபெற்றது . bridge media | Gifts for Runners