11th May 2020 07:47:19 Hours
வெசாக் தினத்தை முன்னிட்டு 2 ஆவது ( தொண்டர்) இலங்கை இராணுவ பொதுசேவை படையணியின் படையினரால் பொரளை பிரதேசத்தில் வாழும் குறைந்த வருமானத்தை உடைய வரிய குடும்பங்களுக்கு 30 உலர் உணவு பொதிகள் மற்றும் காய்கறி பொதிகளானது, 07 ஆம் திகதி வியாழக்கிழமை நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன. இந்த நன்கொடையானது 2 ஆவது ( தொண்டர்) இலங்கை இராணுவ பொதுசேவை படையணியின் கட்டளை அதிகாரி அவர்களின் தாயான திருமதி மானெல் தெமுனி அவர்களால் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் 2 ஆவது ( தொண்) இலங்கை இராணுவ பொதுசேவை படையணியின் கட்டளை அதிகாரியான லெப்டினன் கேணல் சி.எஸ் தெமுனி, அதிகாரிகள் உட்பட படையினர்களும் கலந்துகொண்டனர். short url link | Upcoming 2021 Nike Dunk Release Dates - Iebem-morelos