11th May 2020 07:52:01 Hours
மட்டக்களப்பு மாவட்டத்தில் வருமை கோட்டின் கீழ் வாழும் கிராண், இலுப்படிசேனை, ஐத்தமலை, கிரான்குளம் மற்றும் குருக்கல்மடம் அகிய பகுதிகளில் வாழும் 50 குடும்பங்களுக்கு ஒவ்வொன்றும் 2000.00 ரூபா பெருமதியான உலர் உணவு பொதிகள், டொக்டர் கல்பனி திசாநாயக்க மற்றும் திரு. தர்ஷன குணரத்ன (ஐக்கிய அமெரிக்கா) மற்றும் கண்டியைச் சேர்ந்த திருமதி விமலா திசனாயக்க ஆகியோர்களின் அனுசரனையில் வழங்கப்பட்டது.
வெசாக் பௌர்ணமி போயா தினத்தை கொண்டாடும் முகமாக, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 231 படைப்பிரிவு தலைமையகமானது நன்கொடையாளர்களுடன் இணைந்து வெள்ளிக்கிழமை (8) மட்டக்களப்பு பகுதியில் உள்ள வறிய குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை நன்கொடையாக வழங்கியது. கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கேணல் ஜிஎஸ் கேணல் சுபாத் சஞ்சீவ நன்கொடையாளர்களுடன் ஒருங்கிணைந்து இதனை மேற்கொண்டார்.
கோவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் தற்போதைய சுகாதார அச்சுறுத்தலில் பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகும் குறைந்த சலுகை பெற்ற குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட மற்றுமொரு சமூகம் நிகழ்ச்சித்திட்டம் இதுவாகும். trace affiliate link | Women's Nike Air Jordan 1 trainers - Latest Releases , Ietp