Header

Sri Lanka Army

Defender of the Nation

11th May 2020 20:06:48 Hours

சுகாதார அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முணசிங்க கடமையேற்றல்

இராணுவ மருத்துவ சேவை பணிப்பாளர் நாயகமும் , இராணுவ மருத்துவ சேவை படையணியின் படைத் தளபதியும் மற்றும் இலங்கை இராணுவ மருத்துவ கல்லூரியின் தலைவருமான மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முணசிங்க அவர்கள் சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சின் செயலாளராக, சுகாதார அமைச்சில் வைத்து தனது கடமையை 11 ஆம் திகதி பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவரது சுருக்கமான விபரம் பின்வருமாறு:

இராணுவ மருத்துவ சேவை பணிப்பாளர் நாயகமும் , இராணுவ மருத்துவ சேவை படையணியின் படைத் தளபதியும் மற்றும் இலங்கை இராணுவ மருத்துவ கல்லூரியின் தலைவருமான மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முணசிங்க அவர்கள் சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சின் செயலாளராக 2020 மே 11 ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழிலில் புகழ்பெற்ற ஆலோசகர் கதிரியக்கவியலாளர் மேஜர் ஜெனரல் முனசிங்க 1984 ஆம் ஆண்டில் ருஹுனு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் எம்.பி.பி.எஸ் பட்டப்படிப்பை முடித்து இலங்கை இராணுவத்தில் சேர்ந்தார் .இலங்கை இராணுவ கல்லூரியில் (எஸ்.எல்.எம்.ஏ) ஆரம்ப இராணுவ பயிற்சி முடிந்ததும், அவர் கெப்டன் பதவியில் நியமிக்கப்பட்டு இலங்கை இராணுவ மருத்துவப் படையில் சேர்ந்தார்.

அவரது 34 ஆண்டுகளுக்கும் மேலான இராணுவ சேவையில் , ரண விக்ரம பதக்கம் (ஆர்.டபிள்யூ.பி), ரண சூர பதக்கம் (ஆர்.எஸ்.பி), விஷிஷ்ட சேவ விபுஷன (வி.எஸ்.வி), உத்தம சேவா பதக்கம் (யு.எஸ்.பி) , கிழக்கு மனிதாபிமான செயல்பாட்டு பதக்கம், வடக்கு மனிதாபிமான செயல்பாட்டு பதக்கம், பூர்ண பூமி பதக்கம், வடக்கு மற்றும் கிழக்கு செயல்பாட்டு பதக்கம், வடமராச்சி செயல்பாட்டு பதக்கம், ரிவிரேசா பிரச்சார பதக்கம், 50 ஆவது சுதந்திர ஆண்டு பதக்கம், இலங்கை இராணுவத்தின் 50 ஆவது ஆண்டு பதக்கம் மற்றும் இலங்கை ஆயுத சேவை நீண்ட சேவை ஆகிய பதக்கங்கள் உட்பட பல பதக்கங்கள் அவருக்கு வழங்கப்பட்டன.

மேஜர் ஜெனரல் முனசிங்க அவர்கள் இலங்கையில் தனது எம்.டி (கதிரியக்கவியல்) படிப்பு (1993), எம்.பி.பி.எஸ். நியூரோ-ரேடியாலஜி மற்றும் இன்டர்வென்ஷனிஸ்ட் கதிரியக்கவியல் (ஆஸ்திரேலியா 1994-1995), நியூரோ-இன்டெரெஷனிஸ்ட் கதிரியக்கவியல் ( ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம் 1999), மேம்பட்ட சி.டி (மேரிலாந்து பல்கலைக்கழகம்- ஐக்கிய அமேரிக்கா 2000) இல் பெல்லோஷிப் மற்றும் மேம்பட்ட எம்ஆர்ஐ (ஜெர்மனி 2018) இல் பெல்லோஷிப் ஆகிய துறைகளில் பட்டங்களை பெற்று சிறந்த அனுபவமுள்ளவராக காணப்படுகின்றார்

தனது அர்ப்பணிப்புள்ள மருத்துவ சேவையின் போது, அவர் கொழும்பு இராணுவ மருத்துவமனையில் கட்டளை அதிகாரி, இராணுவ மருத்துவ சேவைகள் பணிப்பாளர் , மருத்துவ ஆலோசகர் மற்றும் இராணுவ மருத்துவ சேவைகள் பணிப்பாளர் நாயகம் என பல முக்கிய நியமனங்களை வகித்துள்ளார். அவர் தற்போது இலங்கை இராணுவ மருத்துவ படையின் படைத் தளபதியாகவும் சேவையாற்றி வருகிறார்.

களுத்துரையில் உள்ள ஞானோதய வித்யாலயம் மற்றும் திஸ்ஸ வித்யாலயாவின் புகழ்பெற்ற மாணவரான மேஜர் ஜெனரல் முனசிங்க, இராணுவ சுகாதார சேவைகளின் முதல் பணிப்பாளர் நாயகமாக 2014 ஏப்ரல் 22 திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் சேர்ந்தார், இப்போது சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சகத்தின் முதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.மேஜர் ஜெனரல் எஸ்.எச். முனசிங்க பிரிகேடியர் டொக்டர்) டி.டி.என் முனசிங்கவை மணந்து கொண்டதுடன் அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. latest jordan Sneakers | Nike Dunk Low Disrupt Pale Ivory - Grailify