09th May 2020 08:40:38 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 68 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் 683 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையத்தின் கீழ் இயங்கும் 7 ஆவது கெமுனு ஹேவா மற்றும் 9 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையினரால், நந்திக்கடல் பிரதேசத்தில் வசிக்கும் தேவையுடைய குடும்பங்களுக்கு வெசாக் தினத்தன்று 07 ஆம் திகதி சமைத்த உணவுகள் மற்றும் உலர் உணவுப் பொதிகளையும் வழங்கப்பட்டன.
கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் ஊரடங்கு உத்தரவு விதித்ததால் பொதுமக்கள் பல கஷ்டங்களுக்கு ஆளாகியிருந்தனர்.
இந்த திட்டமானது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் டீப்தி ஜயத்திலக்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது. 68 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்.எம்.பி.ஜே ரத்நாயக்க மற்றும் 683 ஆவது பிரிகேட் படை கட்டளைத் தளபதி டி.ஆர்.என் ஹெட்டிஆராச்சி , கட்டளை அதிகாரிகள் , அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் ஆகியோர் இந்த திட்டத்தை ஒழுங்குபடுத்தினர்.
குறித்த பொதிகளை விணியோகம் செய்வதற்கு,683 ஆவது பிரிகேட் படை கட்டளைத் தளபதி , கட்டளை அதிகாரிகள் , அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் ஆகியோர் தங்களது ஒத்துழைப்பினை வழங்கினர்.
அதேவேளை, 682 ஆவது பிரிகேட் படையினர் வெள்ளிக்கிழமை 8 ஆம் திகதி கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக பொருளாதார்ரீதியில் கஷ்டப்படும் 50 குடும்பங்களுக்கு 50 உலர் உணவுப் பொதிகளை வழங்கினர்.
682 ஆவது பிரிகேட் தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வன்பளிப்பிற்கு 682 ஆவது பிரிகேட் தலைமையகத்தின் கீழ் இயங்கும் பட்டாலியன் படையினரால் அனுசரணை வழங்கப்பட்டது.
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் டீப்தி ஜயத்திலக்க ,682 ஆவது பிரிகேட் படை கட்டளைத் தளபதி சில அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். Authentic Sneakers | jordan Release Dates