07th May 2020 12:00:43 Hours
முகாம்களில் உள்ள ஆயுதப் படைகளின் சுகாதாரப் பாதுகாப்பைக் கையாள்வதற்காக, அதிமேதகு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட புதிய சிறப்பு ஜனாதிபதி செயலணியினர், மேற்கு மாகாண ஆளுநர் மற்றும் விமானப்படை மார்ஷல் ரொஷன் குனதிலக ஆகியோரின் தலைமையில் மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஸ்தா, 12 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவுத் தளபதி மேஜர் ஜெனரல் பிரதாப திலகரத்ன மற்றும் 122 ஆவது பிரிகேட் கட்டளை தளபதி ஆகியோர் இணைந்து 12 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவு,122 பிரிகேட் தலைமையகம்,3 ஆவது இலங்கை இராணுவ தேசிய பாதுகாப்பு படையணி மற்றும் லுனுகம்வெகரயில் அமைந்துள்ள இளைஞர் படை பயிற்சி மையம் ஆகிய இடங்களுக்கு 06 ஆம் திகதி புதன் கிழமை விஜயத்தை மேற்கொண்டனர்.
அவர்களின் விஜயத்தின் பின்னர், அனைத்து அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர்களின் கண்டுபிடிப்புகள் மதிப்பாய்வு செய்யப்பட்டன, மேலும் சுகாதார நடவடிக்கைகள் மற்றும் சுகாதாரத் தரங்கள் நெறிப்படுத்தப்பட்ட வரையில் மேலும் முன்னேற்றத்திற்கான பல விடயங்களை திட்டமிட்டனர்.
பாதுகாப்பு செயலாளர் மற்றும் முப்படைத் தளபதிகளின் வழிகாட்டுதலின் கீழ் ஒரு பயனுள்ள பொறிமுறையை செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் மற்றும் தொற்று நோயைக் கருத்தில் கொண்டு இராணுவ முகாம்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதாரப் பாதுகாப்புகளை உறுதி செய்ய வேண்டிய நடவடிக்கைகளை அடையாளம் காண்பது ஆகியன இந்த ஜனாதிபதி செயலணியினரின் பொறுப்பாகும். இந்த திட்டமானது, ஓய்வுபெற்ற பாதுகாப்புத் தளபதிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் பங்களிப்புடன் அதமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களால் இந்த ஏற்பாடுகள் முன்வைக்கப்பட்டன. affiliate link trace | Women's Nike Air Force 1 Shadow trainers - Latest Releases , Ietp