09th May 2020 11:56:17 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் எப்பவல இகல கல்மில்லவ அதிரனிகமையில் வசிக்கும் வரிய குடும்பத்தினருக்காக நிர்மாணிக்கப்பட்ட மேலும் ஒரு வீடு புதன்கிழமை 6 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
அதிகாரிகள் பயனாளியின் உறவினர்கள் 7ஆவது இலங்கை படைக்கலச் சிறப்பணியின் படையினர் மற்றும் வன்னியில் வீட்டுத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் 212ஆவது பிரிகேட் தலைமையகத்தின் இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் கேணல் அனில் பீரிஸ் ஆகியோரின் முன்னிளையில் பிரதம அதிதியான வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித்த தர்மசிறி அவர்கள் பயனாளியான திரு டபல்யூ ஏ வணிகசூரியஆராச்சி அவர்களிடம் வீட்டின் திறப்பினை கையளித்தார்.
அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகக் கொண்ட திரு பீர்த்தி கஜநாயக்க அவர்கள் தனிப்பட்ட தொடர்புகளின் மூலம் குறித்த வீட்டினை நிர்மானிப்பதற்கான அனுசரணையினை வழங்கினார். குறித்த ஆதரவற்ற கும்பத்தின் சூழ்நிலையினை கருத்திற் கொண்டு 7ஆவது இலங்கை படைக்கலச் சிறப்பணியின் படையினர் மனிதாபிமானமான அடிப்படையில் இவ் வீட்டினை நிர்மானித்து முடித்தனர். இவ்வீடானது இருக்கை சாப்பாட்டு அறை படுக்கை அறை குளியல் அறை சமயலறை மற்றும் அதே அனுசரணையாளரினால் வழங்கப்பட்ட தேவையான வீட்டு உபகரணங்கள் மின் உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் உட்பட பல வசதிகளை உள்ளடக்கி காணப்படுகின்றது.
செத் பிரித் சமய அனுஷ்டானங்களுக்கு மத்தியில் புதிய வீட்டின் திறப்புகள் கையளிக்கப்பட்டன. Sports brands | Beyonce Ivy Park x adidas Sleek Super 72 ICY PARK White , Where To Buy , GX2769 , Ietp