09th May 2020 08:31:38 Hours
புத்தளத்திலுள்ள 58 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படையினர் புத்தளத்திலுள்ள லுர்து மாதா முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் மற்றும் இலவச மதிய உணவுகளை வியாழக்கிழமை 7ஆம் திகதி வழங்கினர். இந் நிகழ்வில் 58ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ அவர்கள் கலந்து கொண்டார்.
ஓவ்வொன்றும் 1500 ரூபா பெறுமதியுடைய பொதிகளானது 31 முதியோர்களுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டன.
இவ் வன்பளிப்பிற்கான அனுசரணையானது 58 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினரால் வழங்கப்பட்டது. அதேநேரம் காலாடிய மற்றும் நெலும் வெவ கிராமங்களில் உள்ள தேவையூடைய குடும்பங்களுக்கு படையினர் 120 சமைத்த உணவூகளை வழங்கினர். bridge media | Air Jordan Release Dates 2020