09th May 2020 08:15:38 Hours
இலங்கை இராணுவ பொலிஸ் படையணியினர் வெசாக் தினத்தை முன்னிட்டு 100 x 67 அடி பெரிய பௌத்த கொடியினை கட்டியதுடன் அதனை 7 ஆம் திகதி வெசாக் தினத்தன்று கொழும்பு 5 இல் அமைந்துள்ள மாவட்ட செயலக கட்டிடத்தில் தொங்கவிட்டனர்.
இலங்கை இராணுவ பொலிஸ் படையணியை சேர்ந்த சார்ஜன் கே.கே.எம்.புஸ்பகுமார அவர்களின் முயற்சியில் 2564 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த புத்தர் அவர்களின் புனித தினத்தினை கௌரவப்படுத்தும் முகமாக குறித்த கொடியானது மகாசங்க உறுப்பினர்களால் ஆசிர்வதிக்கப்பட்டு கட்டிடத்தில் உயர்த்தி கட்டப்பட்டது.
இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் மத்திய கட்டளைத் தளபதி கேணல் லக்ஸ்மன் பமுனுசிங்க எஜ்ஐயு கட்டளை அதிகாரி சில சிரேஸ்ட அதிகாரிகள் அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் இக் கொடியேற்றும் நிகழ்வில் கலந்துகொண்டனர். short url link | nike fashion