07th May 2020 13:55:24 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதாபிமானமான செயற்பாடான வரிய குடும்ங்களுக்கான வீடுகள் நிர்மானித்து கொடுக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக , உடுவில் (தெற்கு) பிரதேசத்தில் புதிய வீடு நிர்மானிப்பதற்கான அடி கல் நடும் நிகழ்வு புதன்கிழமை 06 ஆம் திகதி இடம்பெற்றது.
யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய அவர்களின் வேண்கோளிற்கமைய,திருமதி கே சகிதா அவர்களின் குடும்ப நிலையானது, தென்பகுதி நன்கொடையளரான திரு.குமார வீரசூரிய அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதனையடுத்து அவரினால் இவ்வீட்டிற்கான அனுசரணையானது வழங்கப்பட்டது.
51 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் கீழ் உள்ள 511 ஆவது பிரிகேட் படைத் தலைமைய கட்டளைத் தளபதியின் மேற்பார்வையின் கீழ் 9 ஆவது இலேசாயுத காலாட்படையினரால் இவ்வீட்டினை நிர்மானிப்பதற்கான மனித வள ஒத்துழைப்பானது வழங்கப்படும்.
சில சிரேஷ்ட அதிகாரிகளுடன் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மற்றும் பயனாளியின் குடும்ப உறப்பினர்கள், இந்து மத வழிபாட்டிற்கு மத்தியில் அடிக்கல்லினை நாட்டினர்.
அடிக்கல் நாட்டும் நிகழ்வினைத் தொடர்ந்து,குறித்த பிரதேசத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட கும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகளானது வழங்கப்பட்டன. சில நாட்களுக்கு முன்னர், தென் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் அனுவரணையுடன் மற்றுமொரு வரிய குடும்பத்திற்கு நிர்மானித்து கொடுத்த 701 ஆவது வீட்டினை படையினர் திறந்து வைத்தனர்.
51 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி, 511 ஆவது பிரிகேட் கட்டளைத் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் சுகாதார வழிகாட்டலினை பின்பற்றி குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர். Nike sneakers | Beyonce Ivy Park x adidas Sleek Super 72 ICY PARK White , Where To Buy , GX2769 , Ietp