06th May 2020 21:34:35 Hours
யாழ் பாதுகாப்பு படையினரால் உரும்பிராய் மேற்கு பிரதேசத்தில் வரிய குடும்பத்தினருக்காக நிர்மானிக்கப்பட்ட 701 ஆவது புதிய வீடானது, செவ்வாயக்கிழமை 5 ஆம் திகதி யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய அவர்களின் பங்குபற்றுதலுடன் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த வீட்டினை நிர்மானிப்பதற்கான அனுசரணையானது சமூக ஆர்வளர் செல்வி துஷார தேனுவர மற்றும் 5 ஆவது இலங்கை இராணுவ சேவைப் படையிணியின் 12 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு அப்படையனியின் ஏனைய படையினர் ஆகியோரினால் வழங்கப்பட்டது. புதிய வீட்டின் திறப்பினை குடும்ப உறுப்பினர்கள் இணைந்து பெற்றுக் கொண்ட திருமதி ஆருமுகம் ராசம்மா பிரதம அதிதியுடன் இணைந்து வீட்டினை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து இந்து முறைப்படி சமய அனுஷ்டானங்கள் இடம்பெற்றன.
511 ஆவது பிரிகேட் தலைமையகத்தின் கட்டளைத் தளபதியவர்களின் மேற்பார்வையின் கீழ்,15 ஆவது இலங்கை இராணுவ சேவைப் படையிணியின் படையினர் இவ் வீட்டின் நிர்மான பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டனர்.
51 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி ,511 ஆவது பிரிகேட் கட்டளைத் தளபதி,சில அதிகாரிகள் , வீட்டினை நிர்மானித்த ஏனைய படையினர் மற்றும் பயனாளியின் உறவினர்கள் உட்பட பலர் இவ்வீட்டு திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். latest jordans | adidas Yeezy Boost 700 , promo code for adidas shoes india delhi today