05th May 2020 17:30:58 Hours
ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் மற்றுமொரு ஊடக சந்திப்பு திங்கட்கிழமை (4) ஆம் திகதி சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னிஆராச்சி, கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
அச் சந்திப்பில் கலந்து கொண்ட ஜனாதிபதி செயலணி உறுப்பினர்கள் மற்றும் பிரதம அதிதிகளை லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வரவேற்றதுடன் தகவல்களை மீள்பரிசீலனை செய்தல் மற்றும் தொற்று நோயின் தற்போதைய நிலவரம் தொடர்பான சந்திப்பு என குறிப்பிட்டார். மேலும் பிசிஆர், வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் வருகை மற்றும் சமூகத்திலுள்ள பொதுமக்களின் நலன் தொடர்பாகவும் விளக்கமளித்தார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க அவர்கள் நாட்டினுடைய தற்போதைய கோவிட்-19 தொற்று நோய் தொடர்பான விபரமான விளக்கத்தினை அளித்ததுடன் முப்படையினரின் ஒத்துழைப்புடன் எவ்வாறு மருத்துவ நிபுணர்களினால் கட்டுப்படுத்தப்பட்டன என்பதனைப் பற்றியும் குறிப்பிட்டார். மேலும் அவர் குறிப்பிடுகையில், பி.சி.ஆர் பரிசோதனையில் 3 வீதமானோர் தொற்றுக்குள்ளானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மற்றும் நாட்டின் இத்தொற்று நோயினால் 1 வீதமானோர் இறந்துள்ளனர் என்று தெரிவித்தார்.
ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் தென் ஆசிய நாடுகளில் இருந்து இலங்கை வந்த இலங்கையர்களின் தகவல்களைப் பற்றி ஜனாதிபதி வெளிவிவகார மேலதிக செயலாளர் ஓய்வுபெற்ற அடமிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே அவர்கள் தெளிவுபடுத்தினர். மேலும் அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், ரஷ்யா மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து அரசின் ஒத்துழைப்புடன் இலங்கைக்கு வரவிருக்கும் நபர்கள் தொர்பாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கொழும்பு மக்களின் தற்போதைய நிலவரம் தொடர்பாக டொக்டர் லக்மினி சேமத்துன அவர்கள் நிபுணர்களுக்கு விளக்கமளித்தார்.
கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் பெருமதிமிக்க ஆலோசணைகள் மற்றும் பரந்துரைகளை வழங்கிய உறுப்பினர்களுக்கு தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார். மேலும் ஏற்கனவே தெறியப்படுத்தப்பட்ட திட்டத்திற்கு ஏற்றவகையில் பணியில் ஈடுபடும் குழுவினரின் செயற்பாட்டுத்திட்டத்தினை சரியான முறையில் ஒழுங்குபடுத்துமாறு குழு உறுப்பினர்களிடம் அவர் வேண்டிக் கொண்டார். Nike Sneakers Store | NIKE HOMME