Header

Sri Lanka Army

Defender of the Nation

06th May 2020 21:45:01 Hours

5052 பேர் தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர்- லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு

ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் வழக்கமான ஊடக சந்திப்பு இன்று மதியம் (4) சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னிஆராச்சி, கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன, மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

மாணவர்கள் உட்பட 208 பேர் ஐக்கிய இராஜ்ஜியத்தின் லன்டனில் இருந்து 4 ஆம் திகதி காலை இலங்கை வந்தடைந்தனர். அவர்கள் அனைவரும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டுள்ளனர். அதேநேரம் அரச அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட மற்றைய ஒரு குழுவினர் நாளை காலை 5 ஆம் திகதி லன்டனில் இருந்து இலங்கைக்கு சொந்தமான விமானத்தின் ஊடாக இலங்கை வரவுள்ளனர். அவர்கள் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்படுவர் என்பது குறிப்பிட தக்க விடயமாகும்.

அதேநேரம் மாதுருஓயாவில் தனிமைப்படுத்தப்பட்ட 119 பேர் மற்றும் இராணுவ மற்றும் கடற்படையினரால் நிர்வகிக்கப்படும் நிபுனா பூசாவில் தனிமைப்படுத்தப்பட்ட மேலும் 10 பேர் பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொண்ட பின்னர் அவர்கள் (04) தனிமைப்படுத்தப்பட்ட சான்றிதழ்களுடன் தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். இதுவரை, முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் மொத்தம் 5052 தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்

அதேபோல், இன்று 4 ஆம் திகதியுடன் தொற்றுக்குள்ளான கடற்படையினருடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய 1031 நபர்கள் தனிமைப்படுத்தல் நி லையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தற்பொழுது நாடுபூராகவுமுள்ள 35 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 4522 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர். அதனடிப்படையில் இன்று 4 ஆம் திகதியுடன் கொவிட்-19 தொற்றுக்குள்ளான கடற்படையினரின் மொத்த எண்ணிக்கை 296 ஆகும்.தொற்றுக்குள்ளானவர்களில் கூடுதலானோர் முகாமில் இருந்தவர்கள், மற்றவர்கள் விடுமுறையில் தற்களது வீடுகளுக்கு சென்றவர்கள். வாய்கல் டொல்பின் ஹோட்டலானது அனைத்து வசதிகளையும் கட்டனமின்றி வழங்கி வருகின்றது. இதில் 223 சுகாதார ஊளியர்கள் மற்றும் முப்படையினர் தனிமைப்படுத்தலில் உள்ளனர். அவ்களுக்கு நாங்கள் மனமார்ந்த பாராட்டுகளையும் மற்றும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று நொப்கோ தலைவர் தெரிவித்தார்.

சுருக்கம்

தனிமைப்படுத்தப்பட்ட மொத்தம் நபர்கள் -5052

தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள நபர்கள் -4522

தனிமைப்படுத்தல் நிலையங்கள்- 35

முழுமையான காணொளி பின்வருமாறு; Asics footwear | Asics Onitsuka Tiger