05th May 2020 15:08:19 Hours
இலங்கை இராணுவ தளபதி அவர்களால் ஆரம்பிக்கபட்ட 'துரு மிதுரு-நவ ரட்டக்' எனும் வனமயமாக்கள் மற்றும் பயிரிடல் திட்டத்தினூடாக ஶ்ரீ ஜயவர்த்தனபுர பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலங்களில் டிசம்பர் மாதத்தில் மீண்டும் மேற்கொள்ளப்பட்ட பயிர்ச் செய்கை மற்றும் மர நடுகையானது நல்ல முன்னேற்றமான பிரதி பலனை இராணுவத்தின் இச்செயற்பாட்டினை பாராட்டிய ஆசியா அசெட் பினான்ஸ் பி.எல்.சி. நிறுவனத்தினர் நாடு முழுவதும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் பயிர்செய்கை திட்டத்திற்கு காய்கறி விதைகளை கொள்வனவு செய்ய நிதி உதவியை வழங்கினர்.
இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே மற்றும் வங்கியின் பிரதிநிதிகளின் பங்குபற்றுதளுடன் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, அவர்களுடன் இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் விளைவாக இந்த அங்கிகாரம் பெற்ற தனியார் வங்கியினால் ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. மற்றும் நாட்டில் நிலையான முயற்சிகளை மேற்கொள்வதற்கு இராணுவத்தினால் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து இந்த தனியார் நிறுவனத்தின் பிரதிநிதிகள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் மற்றும் அவர்கள் தங்களது ஒத்துழைப்பை வழங்கினர்.
அதன்பிரகாரம், இத்திட்தினை ஊக்குவிக்கும் நிமித்தம் ஆசியா அசெட் பினான்ஸ் பி.எல்.சி. முகாமைதுவமானது அன்மையில் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே அவர்களை முதவல்லில் உள்ள இலங்கை படைக்கலச் சிறப்பணி படைத் தலைமையகத்தில் வைத்து சந்தித்து 1 லட்சம் பெறுமதியான பண அன்பளிப்பினை காய்கறி விதைகள் மற்றும் தானியங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கியது.
ஆசியா அசெட் பினான்ஸ் பி.எல்.சி. நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி திரு ரொஷான் டி எஸ் குணசேகர அவர்கள் நிறுவனத்தின் சில பிரதிநிதிகள் மற்றும் விவசாய பணிப்பகத்தின் பதவி நிலை அதிகாரி 1 லெப்டின்ன் கேணல் நிஷாந்த முத்தன்திரிகே ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். பின்னர் குறித்த பண காசோலையானது இராணுவ பதவி நிலை அதிகாரியினால் விவசாய மற்றும் கால் நடைகள் பணிப்பகத்திடம் கையளிக்கப்பட்டன. bridge media | Klær Nike