23rd April 2020 10:29:12 Hours
யக்கலையில் அமைந்துள்ள ரணவிரு எபரல் ஆடைத் தொழிற்சாலையின் புதிய கட்டளை தளபதியாக மேஜர் ஜெனரல் சாந்த ராஜகருணா அவர்கள் இம் மாதம் 21 ஆம் திகதி சமய சம்பிரதாய முறைப்படி தனது புதிய பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த பதவியினை நினைவு படுத்தும் முகமாக இந்த தொழிற்சாலை வளாகத்தினுள் மரநடுகைகளும் புதிய படைத் தளபதி அவர்கள் மேற்கொண்டார்.
முன்னாள் கட்டளை தளபதியான மேஜர் ஜெனரல் மஞ்சுள மனதுங்க அவர்கள் தனது பதவியை இம் மாதம் 20 ஆம் திகதி கையளித்து யக்கல மற்றும் அலவ்வையிலுள்ள ஆடைத் தொழிற்சாலைகளுக்கு சென்று அங்கு பணிபுரியும் ஊழியர்களுடன் உரையாடி விடை பெற்றுச் சென்றார். Nike air jordan Sneakers | Marki