23rd April 2020 10:37:21 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 64 ஆவது படைப் பிரிவினர் மாவட்ட பிரதேச செயலகங்களுடன் கலந்தாலோசித்து அப்பிரதேசத்திலுள்ள விவசாயிகளுக்கு உதவியளிக்கும் நோக்கத்துடன் இம் மாதம் (20) ஆம் திகதி அவர்கள் அறுவடை செய்த மரக்கறி வகைகளை கொள்வனவு செய்தனர்.
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தீப்தி ஜயதிலக அவர்கள் இந்த விவசாயிகளிடமிருந்து 1304 கிலோ கத்தரிக்காய்களையையும், 217 கிலோ பூசணிக்காய்களையும் கிலோ 30 ரூபாய்களுக்கு கொள்வனவு செய்தார்.
இந்த மரக்கறி வகைகளை 641, 642 ஆவது படைத் தலைமையகங்கள் பெற்றுக் கொண்டு தொலை தூர பகுதிகளிலுள்ள கிராமங்களுக்கு நிவாரணமாக வழங்கி வைக்கவுள்ளனர். Mysneakers | nike fashion