21st April 2020 18:18:48 Hours
பிராண்டிக்ஸ் எப்பரல் சொல்யூஷன்ஸ் லிமிடெட் மற்றும் ஈஸ்ட் லிங்க் இன்ஜினியரிங் கம்பெனி தனியார் நிறுவனத்தின் அனுசரனையில், இன்று 22 ஆம் திகதி மாலை ராஜகிரியவிலுள்ள கோவிட் - 19 தடுப்பு தேசிய செயல்பாட்டு மையத்தில் (NOCPCO) கொடிய கோவிட் - 19 க்கு எதிரான அரசாங்கத்தின் தடுப்புப் போராட்டத்தை ஆதரிக்கம் முகமாக ஒரு அதிநவீன கிருமி நீக்கம் அறை மற்றும் நோயாளிகளை பரிசோதிக்க புதிதாக புதுமையான க்யூபிகல் இயந்திரத்தை பரிசளித்தனர்.
மிகவும் அதிநவீன மற்றும் விஞ்ஞான ரீதியாக தயாரிக்கப்பட்ட இந்த இயந்திரங்கள் பிராண்டிக்ஸ் லிமிடெட் நிர்வாகத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) உதய பெரேராவின் ஒருங்கிணைப்புடன் இராணுவ தளபதிக்கு நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன.
பிராண்டிக்ஸ் எப்பரல் சொல்யூஷன்ஸ் லிமிடெட் பொது முகாமையாளர் திருமதி மதரா சில்வா, 'ஈஸ்ட் லிங்க் இன்ஜினியரிங் கம்பெனி பிரைவேட் லிமிடெட்' நிர்வாக இயக்குனர் திரு அஜித் இடிகாதுல்லேஜ், போன்றோர் கௌரவத்திற்குரிய அமைச்சர் திருமதி பவித்ரா வன்னியராச்சி மற்றும் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை சந்தித்து இந்த இயந்திரங்களை கையளித்தனர்.
இந்த இயந்திரங்களில் கிருமி நீக்கம் செய்யும் இயந்திரம் .3.5 லட்சம் ரூபாய் மதிப்பு மிக்கதாகவும், மற்றைய நோயாளிகளின் க்யூபிகின் இயந்திரமானது 4.8 லட்சம் ரூபாய் மதிப்பு மிக்கதாகும்.
இந்த இயந்திரங்கள் கையளிக்கும் சந்தர்ப்பத்தில் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் உதய பெரேரா அவர்களும் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். bridge media | New Balance 991 Footwear