21st April 2020 19:00:54 Hours
பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது வழிக்காட்டலின் கீழ் கம்பஹா மாவட்டத்திலுள்ள திரு பியசேன கமகே அவர்களது நிதி அனுசரனையில் 168 டொன் மரக்கறி வகைகள் இராணுவத்தினருக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த மரக்கறிகளை மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 141, 142, 143 மற்றும் 144 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் கொழும்பு, கமபஹா, களுத்தரை மற்றும் புத்தளம் மாவட்டத்திலுள்ள வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த நபர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
இந்த மரக்கறிகள் இராணுவ தளபதியின் ஆசிர்வாதத்துடன் இராணுவ விநியோக மற்றும் போக்குவரத்து பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் இரோஷ் வணிகசேகர அவர்களது பணிப்புரைக்கமைய தம்புளை பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து 43 இராணுவ லொரிகளிலிருந்து இம் மாதம் (20) ஆம் பூசணி, வெள்ளரி, கெப்சிகம், பீட்ரூட், கெக்கிரி, தக்காளி, கத்திரிக்காய், பச்சை மிளகாய் உள்ளடக்கப்பட்ட 12 மில்லியன் ரூபாய் பெருமதி மிக்க மரக்கறி வைகள் கொண்டு வரப்பட்டு விநியோகிக்கப்பட்டன.
இராணுவத்தினர் 100 – 150 பேர்களது பங்களிப்புடன் 15,000 உறைகளில் 5 – 6 கிலோ பெறுமதிமிக்க மரக்கறி வகைகள் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த நபர்களுக்கு கிராம உத்தியோகத்தரின் விபரத்தின் பிரகாரம் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த மரக்கறிகள் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த செனெவிரத்ன, 14 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எஸ் ஆரியசிங்க மற்றும் 141, 142, 143 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதிகளின் கண்காணிப்பின் கீழ் இந்த மரக்கறி வகைகள் விநயோகிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Running Sneakers | balerínky