Header

Sri Lanka Army

Defender of the Nation

20th April 2020 18:17:12 Hours

யாழ் படையினரால் பொது இடங்களில் கிருமி தொற்று நீக்கம்

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் சேவைபுரியும் படையினரால், அரச நிறுவனங்கள், வைத்தியசாலைகள்,பேருந்து நிலையங்கள், நலன்புரி நிலையங்கள், அரச மற்றும் தனியார் வங்கிகள்,கடைப் பிரதேசங்கள் ,பொது மக்கள் கூடும் இடங்கள், முச்சக்கர வண்டி தரிப்பிடங்கள் மற்றும் ஏனைய இடங்கள் உள்ளிட்ட பல இடங்கள் சனிக்கிழமை 18ஆம் திகதி கிருமி நீக்கம் செய்யப்பட்டன.

இக்கிருமி நீக்க ஒழுங்குகளானது, பல இராணுவ குழுக்களினால் நல்லூர்,சுன்னாகம், திருநல்வேலி, அராலி,வலிகாமம், சங்கானை ,தெலிப்பாலை மற்றும் ஏனைய சில பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டன. யாழ்ப்பாணத்தில் மேலும் கோவிட்-19 வைரஸ் பரவலை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட மேலும் ஒரு சமூக நலன்புரித் திட்டமாகும். latest jordan Sneakers | adidas Yeezy Boost 350