Header

Sri Lanka Army

Defender of the Nation

17th April 2020 22:35:44 Hours

இலங்கை படைக்கலச் சிறப்பணியினால் சிவில் ஊளியர்களுக்கான புத்தாண்டு பரிசுகள் வழங்கள்

ரொக் கவுஸ் முகாமில் அமைந்துள்ள இலங்கை படைக்கலச் சிறப்பணி தலைமையகத்தில் சேவையாற்றும் சிவில் ஊளியர்களின் சிறந்த வகிபாகத்தினை கருத்திற்கொண்டு, புத்தாண்டிற்காகவும் மற்றும் ஊரங்குச் சட்ட அமுலினால் அவர்கள் சிறமங்களை எதிர்நோக்கி கொண்டிருக்களாம் என்றடிப்படையிலும், இலங்கை படைக்கலச் சிறப்பணியின் அதிகாரிகள் ஒன்றிணைந்து வெள்ளிக்கிழமை 17 ஆம் திகதி ஏழு நபர்களுக்கான நிதியுதவி மற்றும் உலர் உணவுப் பொதிகளை வழங்கினர்.

இந்த ஏற்பாட்டில் இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை படைக்கலச் சிறப்பணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே அவர்கள் கலந்து கொண்டார். ஒவ்வொரு அன்பளிப்பு பொதிகளின் பெறுமதி சுமார் ரூபா. 2000 ஆகும், மேலும் ஒவ்வொருவருக்கும் பண வைப்பும் இலங்கை படைக்கலச் சிறப்பணியினால் மேற்கொள்ளப்பட்டது.

சுய தனிமைப்படுத்தல் நிகழ்வு காரணமாக, பணமானது அவர்களின் வங்கி கணக்கிலக்கத்திற்கு வைப்பிலிடப்பட்டன. இலங்கை படைக்கலச் சிறப்பணி தலைமையகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மத்திய கட்டளைத் தளபதி, சில அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் கலந்து கொண்டனர். Nike shoes | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092