Header

Sri Lanka Army

Defender of the Nation

17th April 2020 17:30:05 Hours

விஜயபாகு காலாட் படையணியின் புதிய படைத் தளபதியாக பிரிகேடியர் சிசிர பிலபிட்டிய அவர்கள் கடமையேற்றல்

விஜயபாகு காலாட் படையணியின் 19 ஆவது புதிய படைத் தளபதியாக பிரிகேடியர் சிசிர பிலபிட்டிய அவர்கள் தனது கடமையை, போயாகனையிலுள்ள விஜயபாகு காலாட் படையணி தலைமையகத்தில் வைத்து மத அனுஷ்டனங்களுக்கு மத்தியில் வெள்ளிக்கிழமை 17 ஆம் திகதி பொறுப்பேற்றுக் கொண்டார்.

தனது புதிய பதவிக்கு மேலதிகமாக தற்பொழுது அவர் இராணுவத் தலைமையகத்தில் ஆளனி நிருவாக பணிப்பாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.

விஜயபாகு காலாட் படையணி தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் உத்தியோகபூர்வமான ஆவணத்தில் தனது கையொப்பத்தினை இட்டு கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

அங்கு அவருக்கு சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.trace affiliate link | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf