Header

Sri Lanka Army

Defender of the Nation

12th April 2020 23:44:59 Hours

மீனவர் சங்கத்துடன் இணைந்து முல்லைத்தீவு படையினர் பொதுமக்களுக்கு இலவசமாக மீன்கள் வழங்கள்

பிரதேசத்தில் உள்ள மீன் வழங்குனர்களின் ஒருங்கிணைப்பில் , முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர் கிராமத்திலுள்ள நுகர்வோருக்களுக்கு திங்கட்கிழமை 13 ஆம் திகதி இலவசமாக மீன்களை வழங்க மீனவர் சங்கத்திற்கு இராணுவத்தினர் தங்களது ஒத்துழைப்பினை வழங்கினர்.

முல்லியவெல்லி, நாவல் காடு,ஒட்டுசுட்டான் , புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 500 குடும்பங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் 1 கி.கி மீன் விகிதம் 59,64 மற்றும் 68 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவில் சேவையாற்பவர்களினால் வழங்கப்பட்டன.

591 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி,12 ஆவது மற்றும் 23 ஆவத இலங்கை இலேசாயுத காலாட் படையின் கட்டளை அதிகாரிகள் மற்றும் 24 ஆவது இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோர் மீனவர் சங்கத்துடன் இணைந்து இந்த நட்பணி திட்டத்தை நடாத்தினர்.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் டீப்தி ஜயதிலக்க மற்றும் பிரதேசத்திற்கான பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதிகள் இந்த திட்டத்திற்கு தங்களது ஒத்துழைப்பை வழங்கினர்.Adidas shoes | Nike Air Max 270 - Deine Größe bis zu 70% günstiger