12th April 2020 23:45:59 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் அனைத்து பாதுகாப்பு படையின் கட்டளை பிரிவினை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 60 படையினர் ஞாயிற்றுக்கிழமை 12 ஆம் திகதி வன்னி மற்றும் வடக்கு மாகாண வைத்தியசாலைகளில் தற்போதுள்ள இரத்த வங்கிகளின் இருப்பை நிரப்புவதற்காக, வவுனியா பொது வைத்தியசாலை இரத்த வங்கியின் இரத்த மாற்று வைத்திய ஆலோசகரின் வேண்டுகோளுக்கு அமைவாக ,தங்கள் இரத்தத்தை தானாக முன்வந்து நன்கொடையாக அளித்தனர்.
வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித தர்மசிறி அவர்கள் வன்னி கள வைத்தியசாலை பாதுகாப்பு படை தலைமையகத்தில் இந்த திட்டத்தை தொடங்குமாறு அறிவுறுத்தினார். கொரோனா தொற்றுநோய்களின் போது ஏதேனும் தற்செயல்கள் ஏற்பட்டால், பல்வேறு வகையான இரத்த வகைகள், பிளேட்லெட்டுகள் மற்றும் புதிய பிளாஸ்மா போன்றவற்றிற்கான சரியான நேரத்தில் தேவையை கருத்தில் கொண்டு இது ஏற்பாடு செய்யப்பட்டது.
வவுனியா பொது வைத்தியசாலையின் மருத்துவக் குழுவும், பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் இராணுவ கள வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரிகளும் இந்த இரத்த தான ஏற்பாட்டு நிகழ்வில் இணைந்திருந்தனர்.Sportswear free shipping | Nike Releases, Launch Links & Raffles