Header

Sri Lanka Army

Defender of the Nation

15th April 2020 23:23:46 Hours

கோவிட்-19 இற்கு எதிராக பயன்படுத்த 4000 செட் அறுவை சிகிச்சை முகக்கவசங்கள் இராணுவத்தினருக்கு அன்பளிப்பு

நாடாளவியரீதியாக உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் சிகிச்சை பெற்று வரும் கோவிட்-19 நோயாளிகளை நிர்வகிப்பதில் நூற்றுக்கணக்கான இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து சந்தேகத்திற்கிடமான நபர்களைக் கண்டறிந்து குறித்த நிலையங்களுக்கு கொண்டு செல்வது போன்ற அர்பணிப்பை பாராட்டும் முகமாக, ஸ்ரீ ஜயவர்தனபுரை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், பெப்பிலியானயில் உள்ள ஸ்ரீ சுனேத்ராதேவி ராஜ மஹா பிரிவன் விஹாரையின் தலைமை மத குருவும் பௌத்த மத முன்னணி அறிஞருமான வென் பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ நாயக்க தேரர் அவர்கள் புதன்கிழமை 15 ஆம் திகதி 4100 செட் அறுவை சிகிச்சை முகமூடிகளை கோவிட்-19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற உரையாடலின் போது, வென் அபயதிஸ்ஸ நாயக்க தேரர் அவர்கள் நமது நாட்டின் இந்த முக்கியமான நேரத்தில் ஆயுதப்படைகளினால் வழங்கப்பட்ட அர்ப்பணிப்பைப் பற்றி அதிகம் பேசினார், மேலும் கொடிய வைரஸுக்கு எதிராக தீவிரமாக ஈடுபட்டு வரும் சுகாதார ஊழியர்கள் மற்றும் ஆயுதப்படைகளின் உயிர்களை பாதுகாக்கும் அதேவேளை ஒரு ஐக்கிய குடும்பமாக சவாலை சமாளிக்க வேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிட்டார்.

கோவிட்-19 வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக படையினரால் பயன்படுத்தக்கூடிய பாதுகாப்பு முகக் கவசங்களின் அன்பளிப்பு மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் உள்ள குறித்த நபர்களில் இருந்து படையினரின் பாதுகாப்பு குறித்து மத குருவின் சிந்தனைக்கு லெப்டினன் ஜெனரல் சில்வா நன்றி தெரிவித்தார்.

அவர் இராணுவத் தலைமையகத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, இராணுவத் தளபதி மத குருவிற்கு ஒரு பாகொடவின் பிரதி ஒன்றை நினைவு பரிசாக வழங்கினார் விஹாரையின் மேலும் இரண்டு சேவையாளர்களும் இராணுவ தலைமையகத்திற்கு வருகை தந்தனர்.latest Running Sneakers | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp