Header

Sri Lanka Army

Defender of the Nation

12th April 2020 23:10:06 Hours

படையினரின் ஒத்துழைப்புடன் நிவாரணப் பொதிகள் வழங்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பராக்கிரமபுர, பதவிய, பிசகொட்டுவ, பெல்லங்கடவல,கிரவல்கந்த மற்றும் வெஹரதென்ன ஆகிய பிரதேச செயலகங்களைச் சேர்ந்த 100 வரிய கும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகளானது ஞாயிற்றுக்கிழமை 12 ஆம் திகதி வழங்கப்பட்டன.இதற்கான அனுசரணையானது வென். ஹல்மில்லவ தேரரினால் வழங்கப்பட்டது.

பாதுகாப்பு தலைமைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களினால் விடுக்கப்பட்ட ஆலோசனையின் பிரகாரம், 62 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நே.எம்.யு தம்மிக்க ஜயசிங்க,621 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஏ.பி. விக்ரமசேகர ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் 621 ஆவது பாதுகாப்பு படையினர் 62 மற்றும் 621 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகங்களின் சிவில் விவகார அதிகாரிகள் மற்றும் 17 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையினர் ஆகியோருடன் இணைந்து இவ்விணியோக ஏற்பாட்டினை செய்தனர்.

ஒவ்வொரு நிவாரண பொதிகளும் அரிசி(3 கி.கி), பருப்பு (500 கிராம்), சீனி ( 1 கி.கி), கிரீம் கிரேகர் பிஸ்கட்( 1 பக்கெட்),தேயிலை (50 கிராம்), மிளகாய்த் தூள்(100 கிராம்), உப்பு 1 கி.கி( 1 பக்கெட்), சித்தாலேப 1,பனடோல்-06,சோயா அவரை-100 கிராம்(1பக்கெட்), மிளகு (50 கிராம்), மா(1 கி.கி), ஸ்பிராட்ஸ் (100 கிராம்), பெரிய வெங்காயம் (500 கிராம்), சுவையூட்டிகள் (50 கிராம்), மாரி பிஸ்கட்-1 பக்கெட் ஆகிய பொருட்களை உள்ளடக்கியது.

62 மற்றும் 621 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகங்களின் சிவில் விவகார அதிகாரிகள் கட்டளை அதிகாரிகள் மற்றும் 17 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையினர் உட்பட பலர் இப்பொதிகள் வழங்கும்போது கலந்து கொண்டனர். jordan release date | Nike Off-White