12th April 2020 23:00:06 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11 ஆவது தளபதியாக மேஜர் ஜெனரல் டபல்யு.டி.சி.கே கொஸ்தா அர்கள் மத அனுஷ்டானங்களுக்கு மத்தியியில் தனது கடமையை சனிக்கிழமை 11 ஆம் திகதி தியத்தலவையில் உள்ள மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் வைத்து பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் மத்தியில் தனது கடமையினை உத்தியோகபூர்மாக அலுவலக ஆவணத்தில் கையொப்பமிட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். அங்கு நடைபெற்ற தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட பின்னர், மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் சேவைபுரியும் அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் மத்தியில் உரையாற்றினார். சில நாட்களுக்கு முன்னர் சேவையில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் லக்சிறி வடுகே அவர்களுக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேஜர் ஜெனரல் டபல்யு.டி.சி.கே கொஸ்தா அவர்கள் இப்புதிய நியமனத்தினை பொறுப்பேற்க முன்னர் 64 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதியாக கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. Running sport media | Nike