12th April 2020 23:46:59 Hours
பாதுகாப்புத் தலைமைப் பிரதானி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் ஞாயிற்றுக்கிழமை 12 ஆம திகதி தான் தீபகற்பத்தில் தங்கியிருந்தபோது, கான்கேசந்துரையில் உள்ள வடக்கு கடற்படை கட்டளையின் கீழ் உள்ள அனைத்து படையினரையும் சந்தித்து தனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை அவர்களுக்கு தெரிவித்துக் கொண்டார். கடற்படை பிரதி பதிவி நிலை அதிகாரியும், பிரதேச தளபதியுமான ரியர் அட்மிரல் எஸ்.எம்.டி.கே. சமரவீர அவர்கள் வருகை தந்த பாதுகாப்புத் தலைமைப் பிரதானியவர்களை வரவேற்று நாட்டினுடைய இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாதுகாப்புத் தலைமைப் பிரதானியாக லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை சந்திப்பதில் எங்களுடைய படையினர் அதிஷ்டமாகவும் மற்றும் சந்தோஷமாகவும் உள்ளனர் என்றார். "நீங்கள் அனைத்து படைவீரர்களின் சார்பாக தலைமைத்துவத்தை உங்களிடம் எடுத்துச் சென்று ஒரு சிறந்த சேவையைச் செய்கிறீர்கள். அந்த சவால்களுக்கிடையில், நீங்கள் இன்னும் எங்களை சந்திக்கின்றீர்கள், ”என்று அவர் தனது வரவேற்பு உரையில் குறிப்பிட்டார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, கே.கே.எஸ் துறைமுகத்தில் கட்டுமானத்தில் உள்ள புதிய கப்பலைப் பார்க்குமாறு பிரதேச கடற்படை தளபதி பாதுகாப்புத் தலைமைப் பிரதானியை அழைத்தார். ரியர் அட்மிரல் சமரவீர, யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய, மற்றும் ஒரு சில சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோருடன் இணைந்து பாதுகாப்புத் தலைமைப் பிரதானியவர்கள் கப்பல் வழியாக உலாவச் சென்றார் . அதன் பின்னர் அதே இடத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள 'உத்தாரர' என்ற கப்பலில் உள்ள கடற்படையினரை சந்தித்தார். பின்னர் அவர்களிடம் உரையாற்றிய அவர் அவர்களினால மேற்கொண்ட அர்ப்பணிப்புக்களை பாராட்டியதுடன் மற்றும் இனிய புத்தாண்டு நல வாழ்த்துக்களையும் தெரிவித்தார். மேலும் லெப்டினன் ஜெனரல் சில்வா அவர்கள் குறித்த இடத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பு அவருக்கு ஒரு பாராட்டு நினைவு சின்னம் வழங்கப்பட்டது.
அவர் கடற்படை மாலுமிகளுக்கு உரையாற்றுகையில் "முழு உலகமும் இந்த தொற்று நோயினால் அச்சுறுத்தலுக்கு உள்ளான போது எங்கள் வரலாற்றின் இந்த முக்கியமான கட்டத்தில் நீங்கள் அர்ப்பணித்த மற்றும் விலைமதிப்பற்ற சேவைகளானது ஜனாதிபதி, கௌரவ பிரதமர், பாதுகாப்பு செயலாளர் மற்றும் அனைத்து இலங்கையர்களினாலும் பெரிதும் போற்றப்படுகிறன. எங்கள் மீது நம்பிக்கை வைத்து, முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி, என்னை கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவராக நியமித்து, இந்த சவாலான பணியை தேசத்தின் இருப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளான போதெல்லாம் அதைப் பாதுகாத்த இலங்கை இராணுவம ,கடற்படை மற்றும் விமானப படையினரிடம் ஒப்படைத்தார் .இப்போது நம் வாழ்க்கை மாறிவிட்டாலும், இந்த புத்தாண்டு பருவத்தில் நம்முடைய நெருங்கிய மற்றும் அன்பானவர்களுடன் நாம் ஒன்றுகூட முடியாது என்றாலும், நாம் நன்றாக நடந்துகொள்வதன் மூலமும் மற்ற அனைவரையும் ஆரோக்கியமாக இருக்க அனுமதிப்பதன் மூலம் நாம் நிச்சயமாக நாட்டின் பெருமைமிக்க குடிமகனாக இருக்க முடியும். நாட்டின் நலன்பேண, நீங்கள் ஆரோக்கியமாக இருப்பது அவசியம், எனவே கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களின்படி உங்கள் அனைவருக்கும் கோவிட்-19 பரவுவதற்கு எதிராக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியது அவசியம், ”என்று குறிப்பிட்டார்.
லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் கூறுகையில், நாட்டில் மிகக் குறுகிய காலத்திற்குள் ஆயுதப்படைகள் எவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை நிறுவின என்பதை நினைவூட்டுவதன் மூலம் இந்த முக்கியமான நேரத்தில் கடற்படையினர் மேற்கொண்ட கடின உழைப்பை பாராட்டுகிறேன். . "எங்கள் இரண்டாவது பணி பாதிக்கப்பட்ட நோயாளிகளையும் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்களையும் தேடுவது. இப்பணியை நிறைவேற்ற இராணுவத்தினருக்கு கைகோர்த்த கடற்படையினரின் அர்ப்பணிப்பை அங்கு நான் மிகவும் பாராட்ட வேண்டும். அடுத்து, அவர்களைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு நம் அனைவருக்கும் இற்றை வரைக்கும் உள்ளது. இப்போது வரை, முப்படைகளான நாங்கள் ஒரு தேசமாக எங்கள் பங்கைச் செய்துள்ளோம். அதற்கு மேலதிகமாக , இந்த நடவடிக்கையின் தொடக்கத்திலிருந்து சுகாதார அதிகாரிகளும் பொலிசாரும் எங்களுக்கு ஒத்துழைத்தமைக்கும் நன்றி தெரிவிக்கிறேன், ”என அவர் குறிப்பிட்டார்.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்கள் வழங்கிய ஒத்துழைப்பு எங்கள் பணிகளை எளிதாக்கியது என்றும் அவர் எப்போதுமே இராணுவத்தின் பக்கம் நின்றார் என்றும் பாதுகாப்பு தலைமை பிரதானி மேலும் கூறினார். கடற்படையினர் கிருமிநாசினி அறைகளை மேம்படுத்தி, இந்த தேசிய பணிக்கும், இந்த கொடிய தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்கும் தங்களின் அதிகபட்ச ஆதரவை வழங்கியுள்ளனர். “மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இலங்கையின் பங்கு மிகவும் பாராட்டத்தக்கது. இதற்காக, தேசத்தை காப்பாற்ற ஜனாதிபதி,கௌரவ பிரதமர், பாதுகாப்புசெயலாளர் , முப்படையினர், சுகாதார அமைச்சு, அரசு மற்றும் ஊடகங்கள் தொடர்ந்து தங்கள் பங்களிப்பினை வழங்கிகின்றன.எனவே அவர்கள் அனைவருக்கும் எங்கள் நாடு சார்பாக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கோவிட் - 19 இன் ஐந்தாவது வாரத்தை நாங்கள் கடந்து செல்கிறோம். கோவிட் – 19 தொற்று அதிகரிப்பு சதவீதத்தை மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியும். நாட்டின் நலனுக்காக, நீங்கள் ஆரோக்கியமாக இருப்பது அவசியம், எனவே கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து உங்கள் அனைவருக்கும் கோவிட் – 19 பரவுவதற்கு எதிராக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியது அவசியம், ”என்று அவர் மேலும் கூறினார்.
“அதேபோல், கோவிட்-19 வைரஸிற்கு எதிராகப் போராடும் அதேவேளை போதைப்பொருள் கடத்தல் குறித்த உங்கள் கண்காணிப்பு கடற்படையினர் ஹெரோயின் பெரிய சரக்குகளையும்,ஐஸ் போன்ற போதைப்பொருட்களையும் கொண்டு செல்லும் வெளிநாட்டு கப்பல்களை எங்கள் நாட்டிற்குள்வைத்து கைப்பற்ற உதவினர். அந்த முக்கியமான காலங்களில், தீபகற்பத்தில் உள்ள ஏழைகளுக்கு அத்தியாவசியமான பொருட்களை விநியோகிப்பதில் நீங்கள் ஒரே நேரத்தில் சேர்ந்தீர்கள், இது ஒரு சிறந்த வேலையாகும், ”என்று வருகை தந்த பாதுகாப்பு தலைமை பிரதானி தனது உரையின் போது மாலுமிகளிடம் கூறினார்.affiliate tracking url | Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!