12th April 2020 23:30:06 Hours
கோவிட்-19 எதிர்பரா பரவலை தடுப்பதற்கான செயல்பட்டிற்கு தலைமைவகிக்கும் பாதுகாப்புத் தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் சுகாதாரத் துறை வல்லுநர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சனிக்கிழமை 11 ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்ட தரவிக்குளம் கிராமத்தின் நிலையை அறிந்து கொள்வதற்கும் மற்றும் பிராந்தியத்தில் கடமையில் இருக்கும் நூற்றுக்கணக்கான முப்படையினருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்து ஊக்குவிக்கும் முகமாகவும் மன்னாருக்கு விஜயத்தினை மேற்கொண்டார்.
தனது விஜயத்தின் போது, லெப்டினன் ஜெனரல் சில்வா அவர்கள் கோவிட்-19 வைரஸ்நோயுடைய புத்தளத்தைச் சேர்ந்த ஒருவர் இறுதி சடங்கு ஒன்றிற்கு அங்கு சென்றமையினால் தனிமைப்படுத்தப்பட்ட 900 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 4600 கிராமவாசிகளின் தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைகளின் தற்போதைய முன்னேற்றங்கள் தொடர்பாக மதிப்பீடு செய்தார். இந்த கிராமத்திற்கு உணவுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவது குறித்தும், நகர மையத்திற்கு வருகை தந்த பின்னர் மன்னார் நகரத்திலும் அதன் புறநகர்ப்பகுதிகளிலும் உணவுப் பொருட்கள் கிடைப்பது குறித்து விசாரித்தார்.
54ஆவது பாதுகாப்பு படைப் பிரிவுத் தலைமையகத்தில் லெப்டினன்ட் ஜெனரல் சில்வா அவர்கள் உரையாற்றும போது, சுகாதார வழிகாட்டுதல்களை கவனித்து, தேவையான சமூக தூரத்தை பராமரிப்பதன் அவசியத்தை படையினர் மத்தியில் கூறிய அவர், அரசாங்கத்தின் ஆழ்ந்த நன்றியுணர்வு, பருவகால வாழ்த்துக்கள் மற்றும் ஜனாதிபதிஇகௌரவ பிரதமர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரின் மலரவிருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் நமது சமூகத்தின் இந்த முக்கியமான தருணத்தில இரவும் பகலும் பாராமல் பங்காற்றிய படையினரை பாராட்டினார்.
லெப்டினன் ஜெனரல் சில்வா அவர்கள் மன்னாரில் தங்கியிருந்தபோது விஜயபாகு காலாட்படை படைப்பிரிவு மற்றும் 2 ஆவது இயந்திரவியல் காலாட்படை படைப்பிரிவின் படையினர் மத்தியில் உரையாற்றினர். திரும்பி வரும் வழியில், வீதியோரம் சாலைத் தடைகளை நிறுத்தி, கடமையில் இருந்த வீரர்களுடன் சில எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். அதே நேரத்தில் அவர்களின் சுக நலன்களை விசாரித்து புத்தாண்டு வாழ்த்துக்களையும் கூறினார்.
"இந்த முக்கியமான கட்டத்தில் நீங்கள் அர்ப்பணித்த மற்றும் விலைமதிப்பற்ற சேவைகளை ஜனாதிபதிஇகௌரவ பிரதமர், பாதுகாப்பு செயலாளர் மற்றும் அனைத்து இலங்கையர்களும் பாராட்டியுள்ளனர். நாடு அச்சுறுத்தலுக்கு உள்ளான போதெல்லாம் நீங்கள் அதை எவ்வாறு பாதுகாத்தீர்கள் என்பதற்கு உங்களுடைய தூக்கமின்றிய சேவையானது மகத்தானதாகும். இப்போது நூற்றுக்கணக்கான நாடுகளை அச்சுறுத்தும் இந்த தொற்றுநோய் வேறுபட்ட தன்மை கொண்டது.அங்கு 'எதிரி' கண்ணுக்குத் தெரியாதது மற்றும் அதன் பாதை கணிக்க முடியாதது. எனவே, எளிமையாகவும் நடைமுறை ரீதியாகவும் உள்ள சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளை நாம் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். "என்று அவர் படையினர மத்தியில் உரையாற்றுகையில் கூறினார்
"தேசத்தை நன்மைக்காக, நீங்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருப்பது அவசியம்இ எனவே கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து நீங்கள் அனைவரும்கோவிட்-19 வைரஸ் பரவுவதற்கு எதிராக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியது அவசியம். உங்கள் சொந்த குடும்ப உறுப்பினர்களுக்கும் சுகாதார செய்தியை ஒரு உறுதியான முறையில் கொண்டு செல்வதன் முக்கியத்துவத்தை நான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறேன். குறிப்பாக வரவிருக்கும் புத்தாண்டை அடுத்து, பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பார்வையாளர்கள் பொதுவாக ஒன்றுகூடுகிறார்கள். இந்த முறையில் நடந்துகொள்வதன் மூலம் ஒரு முன்மாதிரியாக இருக்க தீர்மானிப்போம். மேலும் உங்கள் குடும்ப உறுப்பினர்களும் இதைப் பின்பற்றி ஆரோக்கியமாக இருக்கட்டும். இந்த வருடத்தில் உங்கள் ஒவ்வொருவருடனும் நான் புத்தாண்டு நல்வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இருப்பினும் எங்கள் நெருங்கிய மற்றும் அன்பானவர்களுடன் வழக்கம்போல் அதை நினைவுகூர முடியாது. இந்த முக்கியமான தருணத்தில் உங்கள் தீர்க்கமான தேசிய பங்கு நமது சமூகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் விலைமதிப்பற்றது மற்றும் முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள் ”என்று பாதுகாப்புத் தளபதியும் இராணுவத் தளபதியும் வலியுறுத்தினர்.
வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித்த தர்மசிறி,54 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுபஷனவெலிகல, பிரகேட் கட்டளைத் தளபதிகள்,கட்டளை அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட தளபதியின் மன்னார் விஜயத்தின் போது கலந்து கொண்டனர்.Asics shoes | ナイキ エア マックス エクシー "コルク/ホワイト" (NIKE AIR MAX EXCEE "Cork/White") [DJ1975-100] , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!