Header

Sri Lanka Army

Defender of the Nation

11th April 2020 17:05:45 Hours

9 ஆவது சிங்க படையணியினரால் இரத்த்தான நிகழ்வு

தேசிய அவசரகால சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, கோவிட்-19 தொற்றுநோயின் பரவல் மற்றும் கட்டுப்பாட்டின் செயல்பாட்டின்போது அவசரநிலை ஏற்பட்டால் எந்தவொரு அவசர தேவைக்கும் தேவையான இரத்த வகைகளை வழங்குவதற்காக, மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 12 ஆவது பாதுகாப்புப் பரைப்பிரிவின் - கதிர்காம கோதமீகமாவின் 9 ஆவது இலங்கை சிங்க படைப்பிரிவின் அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் வியாழக்கிழமை (9) ஹம்பாந்தோட்டை வைத்தியசாலை இரத்த வங்கிக்கு தங்களது இரத்தங்களை தானம் செய்தனர் .

கோவிட்-19 எதிர்பரா பரவலை தடுப்பதற்கான செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்புத் தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் அறிவுறுத்தலின் பிரகாரம் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் இரத்ததான நிகழ்வில், அதிகாரிகள் உட்பட 40 இற்கும் அதிகமான இராணுவத்தினர் கலந்து கொண்டு தங்களது இரத்தத்தை அவசர தேவையின் நிமித்தம் தானம் செய்தனர்.

திட்டமிடப்பட்ட அட்டவணையின் பிரகாரம், இரண்டாவது மற்றும் மூன்றாவது இரத்த நன்கொடைகள் முறையே 2020 ஏப்ரல் 21 மற்றும் 2020 ஏப்ரல் 23 ஆம் திகதிகளில் யாலவில் அமைந்துள்ள 3 கஜாபா படையணி மற்றும் கதிர்காமத்தில் அமைந்துள்ள 3 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணிகள் நடாத்தப்படும். இந்த ஊரடங்கு உத்தரவு நேரங்களில் அவசரகால தேவைகளுக்க்காக சிகிச்சையளிக்க இந்த முயற்சி உதவும் என்று நம்பப்படுகிறது. jordan Sneakers | 『アディダス』に分類された記事一覧