11th April 2020 18:30:57 Hours
இராணுவத்தினரினால் நிர்வகிக்கபபட்டுவரும் கண்டக்காடு தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்து 37 நபர்கள் 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைக்குப் பிறகு தனிமைப்படுத்தப்பட்ட சான்றிதழ்களுடன் இன்று காலை (9) ஆம் திகதி தங்களது வீடுகளுக்கு புறப்பட்டனர்.
இராணுவத்தினால் வழங்கப்பட்ட போக்குவரத்து வசதிகளுடன் சிலாபம்,கொழும்பு மற்றும் குருநாகல் ஆகிய பிரதேசங்களை நோக்கி புறப்பட்ட குறித்த குழுவினருக்கு படையினரால் சிற்றுண்டி உணவுகள், குடி நீர் மற்றும் மதிய உணவுப் பொதிகள் விஷேடமாக குழந்தைகள் மற்றும் சிறுவர்களை கருத்திற்கொண்டு வழங்கப்பட்டுள்ளன.
குறித்த தனிமைப்படுத்தல் நிலையங்களின் கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் உட்பட பலர், வெற்றிகரமாக இந்த தனிமைப்படுத்தல் காலத்தினை நிறைவு செய்து புறப்பட்ட அவர்களை வழியனுப்பி வைத்தனர். bridge media | youth nike kd low tops orange , Nike Air Max , Iicf