Header

Sri Lanka Army

Defender of the Nation

11th April 2020 17:08:01 Hours

ஊரடங்கு அமுலில் இருக்கும் வேளையில் யாழ் படையினரால் பொதுமக்கள் மருந்தகங்கள் மற்றும் வங்கிகளுக்கு செல்வதற்கான ஏற்பாடு

யாழ் மாவட்ட செயலகம்/பிரதேச செயலகம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக படையினர் 9-10 ஆம் திதிகளில் நூற்றுக்கணக்கான வறிய மக்கள் மற்றும் முதியவர்கள் மருந்தகங்கள் மற்றும் அவர்களின் ஓய்வூதியங்களை பெறுவதற்கு வங்கிகளுக்கு செல்வதற்கான ஏற்பாட்டினை இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் மூலம் செய்தனர்.

இராணுவத் தலைமையக வழிகாட்டலின் பிரகாரம், யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய அவர்களின் வழிகாட்டலின் கீழ் யாழ் பாதுகாப்பு படையினர் அவர்களுடைய ஒத்துழைப்பினை கிராமசேவை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கு வழங்கினர .

இராணுவத்தினர் அவர்களை யாழ்பாணத்திலுள்ள இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் மூலம் அழைத்துச் சென்று மறுபடியும் அவர்களின் வதிவிடங்களுக்கு அழைத்துச் சென்றனர். short url link | Nike Air Max 270