Header

Sri Lanka Army

Defender of the Nation

08th April 2020 14:37:12 Hours

68ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படையினரால் நிவாரணப் பொதிகளை விநியோகிக்க ஒத்துழைப்பு வழங்கள்

'மனுசத் தெரனவின’ நிதியுதவியின் மூலம் புதுக்குடியிருப்பு மற்றும் சுகந்திபுரம் கிராமங்களில் உள்ள ஏழைகளுக்கு நிவாரணப் பொதிகளை விநியோகிக்க முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 68 ஆவது பாதுகாப்புப் பிரிவின் படையினர் செவ்வாய்க்கிழமை 7 ஆம் திகதி ஏற்பாடு செய்தனர்.

அந்தந்த கிராம உத்தியோகத்தருடன் (அரச அதிகாரிகள்) கலந்தாலோசித்த படையினர் தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு மற்றும் அவர்கள் வாழ்வதற்கு தற்போது ஏற்பட்டுள்ள சிரமங்கள் காரணமாக இத்தகைய உதவிக்கு தகுதியானவர்களான 75 குறைந்த வருமானம் கொண்ட குழுக்களைத் தேர்வுசெய்தனர். 'மனுசத் தெரன' பிரதிநிதிகள், 68ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்நாயக்க மற்றும் 683 ஆவது பாதுகாப்பு படைப் படைப்பிரிவு தளபதி ஆகியோருடன் இணைந்து அந்த நிவாரணப் பொருட்களை விநியோகித்தனர்.

பல அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினரும் இந்த திட்டத்திற்கு உதவினர்.Running sneakers | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp